வேலை கிடைக்காததால் வேண்டாத வேலை பார்த்த சென்னை என்ஜினியர்ஸ்.. ஆனாலும் இப்படி ஆசை இருக்க கூடாது
சென்னை: என்ஜினியரிங் முடித்த பட்டதாரி இளைஞர்கள் செய்த செயல் சென்னை சூளைமேட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலை கிடைக்காததால் இந்த வேண்டாத வேலை பார்த்ததாக கூறியது போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது. எனினும் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதில் ஈரோட்டை சேர்ந்த என்ஜினியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், போதை நகராக சென்னை மாறி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். எனினும், தமிழகத்தில் போதைப் பொருள் பரவலை தடுக்க, போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி அழித்து வருகிறார்கள்.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து, அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எப்படி விற்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் போதைப் பொருள் பரவலை தடுக்க ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் சூளைமேடு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் மாறுவேடத்தில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது 4 வாலிபர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மெத்தம페ட்டமைன் என்ற போதைப் பொருளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டை சேர்ந்த பாப்பிஸ்ட் (வயது 20), லாரன்ஸ் (21), ஈரோட்டை சேர்ந்த டென்னீஸ் டிசோசா (20), ரெனீத் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 4 பேரிடமும் 'மெத்தபெட்டமைன்' போதைப் பொருள் மட்டுமின்றி கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் 4 பேரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்பதும், வேலை கிடைக்காததால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறினர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications