குரோம்பேட்டை வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாலம் கைவிடப்பட்டது.. ஷாக் தந்த அரசு
சென்னை: சென்னை கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ரேடியல் சாலையை பிடித்து தான் மேம்பாலம் ஏறி ரயில் பாலத்தையும் ஜிஎஸ்டி சாலையையும் கடக்க முடியும். அதைவிட்டால் எம்.ஐ.டி. மேம்பாலம் போக வேண்டும். வேறு வழியே கிடையாது. இந்நிலையில் ராதா நகரில் 19 வருடங்களாக சுங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் குரோம்பேட்டை வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் பகுதியில் நிலம் இல்லாததால் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி கைவிடப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
25 வருடங்களுக்குமுன்பு சென்னையின் புறநகர் என்று சொல்லப்பட்ட குரோம்பேட்டை இன்று சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. குரோம்பேட்டையை தாண்டாமல் விமான நிலையமோ, ஓஎம்ஆர் சாலைக்கோ, ஈசிஆர் சாலைக்கோ, கிண்டிக்கோ யாருமே போக முடியாது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இடம். ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறது. ஓஎம்ஆர், ஈசிஆர், குன்றத்தூர் போரூர், தாம்பரம், சிட்லப்பாக்கம் என எல்லாமே இணையும் இடமாக குரோம்பேட்டை இருப்பதால் தாம்பரத்தைவிடவும் அசுர வளர்ச்சி அடைந்தது.'

குரோம்பேட்டை
மக்கள் தொகையும் மிகமிக அதிகமாக இருக்கிறது. சென்னை மாநகரில் உள்ள நிலத்தின் மதிப்பை விட குரோம்பேட்டையில் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. வணிக நிறுவனங்கள் எல்லாமே குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ளன. சின்ன தியாகராய நகர் போல் குரோம்பேட்டை மாறிவிட்டது. தாம்பரத்தின் வணிக மையமாக குரோம்பேட்டை தான் இன்றைக்கு இருக்கிறது.குரோம்பேட்டை என்பதை ரயில் நிலையத்தை அடிப்படையாக வைத்து கிழக்கு குரோம்பேட்டை, மேற்கு குரோம்பேட்டை என இரண்டாக உள்ளது.
கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. சாலை மற்றும் அவசர தேவைகளுக்கு மேற்கு குரோம்பேட்டை பகுதிகளுக்கு வரும்போது வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் மூடப்படும்.. இதனால் அவர்கள் நீண்ட தூரம் சுற்றி எம்.ஐ.டி. மேம்பாலம் அல்லது ரேடியல் சாலை மேம்பாலம் வழியாக வரவேண்டிய நிலை இன்று வரை உள்ளது.
ராதாநகர் சுரங்கப்பாதை
இதனால் இந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு அந்த பகுதியில் சுரங்கப்பாலம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, சுரங்கப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் பக்கத்தில் உள்ள ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளும் 19 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது தான் ஓரளவு பணிகள் முடிந்திருக்கிறது. அனேகமாக இன்னும் சில மாதங்களில் திறக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தார்கள்.
வைஷ்ணவ கல்லூரி சுரங்கப்பாதை
இந்நிலையில் குரோம்பேட்டையை சேர்ந்த சந்தானம் என்பவர் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் சுரங்கபாதை குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளித்த பதிலில், "வைஷ்ணவ கல்லூரி ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்க போதிய நிலம் இல்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து ரயில்வே துறையுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கவலை
வைஷ்ணவ கல்லூரி பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராதா நகர் சுரங்கப்பாதை 19 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் நிலையில், இந்த மேம்பாலம் அமைக்கப்படாது என்ற தகவல் குரோம்பேட்டை மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications