36 சிகரெட்ஸ் அளவு நஞ்சு; 10 வருட ஆயுள் காலி! டெல்லியை அடுத்து சென்னைக்கு ஆபத்து!
சென்னை: வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு போகிப் பண்டிகை அன்று காற்று மாசு அளவு 700 ஐ தொட்டுள்ளது.
பொதுவாகப் பனிக்காலங்களில் டெல்லிதான் இந்தப் புகை மூட்டங்களால் கடுமையாகப் பாதிக்கப்படும். அப்படித்தான் செய்திகளில் படிப்போம். ஆனால், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதை போலச் சென்னையில் நிலைமையும் மாறி உள்ளது.

இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்காக மக்கள் எரித்த பழைய குப்பைகளால் வரலாறு காணாத அளவு காற்றில் நஞ்சு கலந்துவிட்டது என்று எச்சரிக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகு சுந்தரராஜன்.
இவர்களுக்கு எல்லாம் வேலையே இல்லைப்பா.. இப்படிதான் ஏதாவாது குண்டைத் தூக்கிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பவர்கள், தயவு செய்து இந்த முழுக் கட்டுரையையும் படித்த பிறகு ஒரு முடிவுக்கு வரவும்.
இனி சுந்தரராஜன் தொடர்வார்.
"ஆண்டுக்கு ஆண்டு காற்று மாசு அதிகரித்து வருவதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த போகி பண்டிகையைவிட இந்தப் போகிக்குக் காற்று மாசு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு Aqi index இன் அளவு 150 அல்லது 200 வரை இருந்தது. இந்த ஆண்டு இடங்களில், சில நேரங்களில் 700 ஐ தாண்டி சென்றுள்ளது என்கிறது புள்ளிவிவரம்.
இது ஏறக்குறைய 3 மடங்கைவிட அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். சென்னையில் பரவலாக மாசு அளவு இரண்டு மடங்கைத் தொட்டுள்ளது.

குறிப்பாகச் சொன்னால், அடையாறில் மாசு அளவு 709 ஐ தாண்டியுள்ளதாக ஒரு ஆப் தகவல் தந்துள்ளது. பொதுவாகச் சென்னை முழுவதும் பார்த்தால் 400 ஐ தொட்டுள்ளது காற்று மாசு அளவு. உலக சுகாதார நிறுவனம் Aqi index இன் அளவு 10 இருக்கலாம் என்றும் அதிகபட்சமாக 20வரை செல்லலாம் என்றும் கூறியுள்ளது. நம் இந்திய அரசு 50வரை போகலாம் என்று சொல்லியுள்ளது.
ஆனால்,இதற்கு மாறாகச் சென்னையில் 400, 700 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் 700 வரை இருந்தால், நாம் 36 கிகரெட்ஸ் பிடித்ததற்குச் சமம். இதுவே கவலை கொள்ள வேண்டிய அம்சம்.
பனிமூட்டம் அதிகமாகச் சென்னையிலிருந்ததால் காலை 10 மணிவரைகூட அந்தப் புகைக் கூட்டம் கலையவே இல்லை. அப்படியே வானத்தை நோக்கி எழ முடியாமல் தரையிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
சென்னையில் மட்டும் 18 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. அல்லது கிளம்புவதற்கு ஏதுவான வானிலை இல்லை என்று அறிக்கை வந்துள்ளது.

நமக்கு அருகில் கடல் இருப்பதால் தப்பித்துக் கொண்டுள்ளோம். கடல் அதிக அளவிலான மாசுபாட்டை வாங்கிக்கொள்கிறது. ஆகவே தான் டெல்லி மாதிரி தத்தளிக்காமல் தப்பி உள்ளோம். அதற்காக நாம் மாசு இல்லாமல் இருக்கின்றோம் என்பது அர்த்தமல்ல. டெல்லிக்கு இணையாகக் காற்று மாசு சென்னையிலும் உள்ளது.
நமது பண்பாட்டில் புதியன புகுதலும் பழையன கழிதலும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது பொருள்களைக் கழித்துத் தள்ளுவதற்காகச் சொன்னதில்லை. நமது சிந்தனைகளில், எண்ண ஓட்டங்களில், செயல்பாடுகளில் உள்ள பழைய மூடநம்பிக்கை விசயங்களைத் துறந்துவிட்டு, அறிவியல் ரீதியாக எது உண்மை யோ அதை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வதைத்தான் பழையன கழிதல் என்றும் புதியன புகுதல் என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

ஆனால், மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நங்களுக்குத் தேவையற்ற பொருள்களைத் தெருக்களில் தூக்கிப் போட்டு எரிப்பதைத்தான் பழையன கழிதல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக நச்சுத் தன்மை கொண்டு பொருள்களை எரிப்பதை வரும் காலங்களில் நாம் தவிர்க்கவேண்டும். டயர் போன்ற பழையவற்றை எரிப்பது மிகமிகக் கேடு தரக்கூடியது.
Aqi index ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. வட இந்தியர்கள் அதிலும் குறிப்பாக டெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் குறைவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு இந்தக் காற்று மாசு கேடுதான் காரணம் என்றும் அந்த அறிக்கைக் கூறியுள்ளது.
அதாவது 70வயது வரை வாழக்கூடிய ஒருவர் காற்று மாசுபாட்டால் 60 வயதிலேயே மரணமடைகிறார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதே தென்னிந்தியாவில் இதன் அளவு 70 வயது வரை வாழக்கூடிய ஒருவர் 67 வயதிலேயே காற்று மாசுபாடு காரணத்தால் இறந்துவிடுகிறார் என்றும் அந்த Aqi index அறிக்கை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

பலர் பண்டிகைக் கொண்டு வந்தால் மட்டும் தான் இந்தப் பிரச்சினை வருகிறதா? எனக் கேள்வி எழுப்பலாம். ஏற்கெனவே நமக்குக் காற்று மாசுபாடு என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த நேரத்தில் திடீரென்று ஒரே நாளில் இவ்வளவு குப்பைகளைப் போட்டு எரிப்பதால் மாசு அளவு பெரிய அளவில் உயர்ந்து விடுகிறது.
ஆகவே அரசு இந்தக் காற்று மாசுபாட்டை மிகக்கடுமையாகக் கண்காணிக்க வேண்டும்" என்கிறார்
இவர் சொல்வது உண்மைதான். கடந்த 5 ஆண்டுகளாகச் சென்னை மிகப்பெரிய காற்று மாசு சீர்கேட்டை எட்டி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகள் முன்பே 10 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது. அதற்கு இந்தப் போகி புகை மண்டலம்தான் காரணம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதிகபட்சமாக மாசு அளவு 277 வரை பதிவானது.
நான்கு ஆண்டுகள் முன்னதாக ராணிப்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. பல நேரங்களில் புகை மூட்டமா? அல்லது பனிமூட்டமா எனத் தெரியாத அளவுக்கு வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முறை 9 ஆண்டுகள் இல்லாத அளவு காற்றில் நஞ்சு ஏறியுள்ளது. படிப்படியாக உயர்ந்து 700 ஐ தொட்டுள்ளது ஆச்சரியம் அல்ல; அபாயம்!
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications