போனை எடுங்க.. போட்டோ எடுங்க.. போட்டுக்கொடுங்க.. சென்னை மக்களே.. உங்களுக்குத்தான் இது!
சென்னை: சென்னை மக்களே, கண் முன்னே அநியாயமான போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கிறதா, உடனே போனை எடுங்க.. போட்டோ எடுங்க.. போட்டுக்கொடுங்க, ட்விட்டரில் போக்குவரத்து போலீசாரை டேக் செய்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் விதிமீறலில் யார் ஈடுபட்டாலும் சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.
நம்ம சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணம்,இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

டாஸ்மாக்கில் போய் குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள், சிக்கினால் போலீசுடன் சண்டை தான். அப்புறம் வீடியோ வெளியாகி அபராதம், சிறை என்கிற அளவிற்கு கூட போகும்.
போலீஸ் இல்லாத பகுதியாக இருந்தால் ஹெல்மெட் பைக்கின் முன்பக்கத்தில் இருக்கும். ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லையிலே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் பல இடங்களில் ஹெல்மெட் போடுவதும் இல்லை. போலீசார் சோதனை செய்யும் பகுதியில் மட்டும் பெயருக்கு ஹெல்மெட் போடுவார்கள்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். ஆனால் அதனால் யாராவது ஒரு அப்பாவி கேள்வி கேட்டால் உன் வேலையை பாருடா என்று செந்தமிழில் பேசுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள். இருசக்கர வாகனத்தில் செல்வோர் அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறித்தான் செல்வார்கள்.
சிக்னல் விழுகப்போகிறது என்றால், பாய்ந்து சென்று சிவப்பு சிக்னல் விழுந்தாலும் ஏறி செல்வார்கள். இதல்லாம் இங்க சர்வ சாதாரணம். சென்னையில் பள்ளிக்கு குழந்தையைவிட போகும் போது ஹெல்மெட் அணிவதை பார்க்கவே முடியாது. பக்கத்து தெருவிற்கு செல்வதாக இருந்தாலே, வீட்டு பக்கத்தில் எங்காவது செல்வதாக இருந்தாலே பலரும் ஹெல்மெட் போடுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் நீண்ட தூரம் சென்னைக்கு செல்வதாக இருந்தால் மட்டும் மக்கள் கண்டிப்பாக ஹெல்மெட் போடுவார்கள். ஏனெனில் ஒருசிக்னல் இல்லாவிட்டாலும் , இன்னொரு சிக்னலில் கண்டிப்பாக மாட்டிவிடுவார்கள்.

என்னப்பா நீட்டி முழக்கிட்டு இருக்க விஷயத்துக்கு வா என்கிறீர்களா.. விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள குறித்து யார் போட்டோ எடுத்து அனுப்பினாலும் அல்லது வீடியோ எடுத்து அனுப்பினாலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலருக்கு பைன் போடப்பட்டிருக்கிறது. ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்துவது, நடைபாதையை ஆக்கிரமிப்பது, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வாகனங்களை பார்க்கிங் செய்தவர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் விஷேசம் என்னவென்றால் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த விதிமீறல் உண்மையா என்பதை சிசிடிவியில் பார்த்து கண்டுபிடித்து அபராதத்தை போலீசார் விதிக்கிறார்கள்.
சென்னை மக்களே இனிமேல் நீங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாதீர்கள். உங்கள் விதிமீறலை போலீசுக்கு டேக் செய்தால் கண்டிப்பாக உங்கள் வீடு தேடி அபராதம் வரும். மேலும் விவரமாக அறிய வேண்டும் என்றால் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் ட்விட்டரை போய் பாருங்கள். உங்களுக்கு நான் சொல்வது புரியும். சென்னை மக்களே உங்கள் கண் முன்னே அநியாயமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தால், போனை எடுங்கள் , போட்டோ எடுங்க, போட்டுக்கொடுங்க.. மற்றத்தை போலீஸ் பார்த்துக் கொள்ளும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications