எப்பா எவ்வளவு வண்டி.. வீடியோ போட்ட நபர்..பதிலுக்கு போட்டோ போட்டு சென்னை போலீஸ் கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வாகனத்தை பார்க்கிங் செய்வதில் மக்களுக்கு பெரிய பிரச்சனை இருக்கிறது. ஏனெனில் பல வீடுகளில் பார்க்கிங் இல்லை. இந்த சூழலில் மெயின்ரோடுகளிலோ அல்லது வீட்டின் முன் பகுதியிலோ வாகனத்தை நிறுத்துகிறார்கள். அப்படி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

சிறிய சந்துக்களில், சிறிய சாலைகளில் சென்னை நகர் முழுவதுமே பார்க்கிங் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் சென்னை சவுகார் பேட்டை பகுதியில் வீடுகளின் கீழ் கண்டபடி பார்க்கிங் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து திலீப் என்பவர் புகார் செய்திருந்தார்.

Chennai City Traffic Police reply to parking issue in Tulasingam lane sowcarpet

பள்ளிக்கு நடந்து செல்லக்கூட முடியாத அளவு சாலையில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதாக கூறியிருந்தார். பள்ளி அமைந்துள்ள இப்பகுதியில் இப்படி இருந்தால் எப்படி போக முடியும் என்று கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சென்னை போலீசார், ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். அந்த புகைப்படத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்டிருந்தன. அதற்கு பதில் அளித்த அந்த நபர், அதிகாலையில் இப்படித்தான் சார் இருக்கும். பகலில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது என்று வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Chennai City Traffic Police reply to parking issue in Tulasingam lane sowcarpet

சென்னையில் பார்க்கிங் என்பது உண்மையிலேயே பெரிய பிரச்சனை தான், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம்உள்ள பகுதிகளில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் இந்த பகுதிகளில் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால், பெரிய அளவில் நெருக்கடி குறையும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+