தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம்.. விஜய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Civil Court Seeks Vijay Response by April 29 in Case Against TVK s Elephant Symbol

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமது அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். தவெக கொடியில் இருபுறமும் யானை, வாகை மலர் இடம்பெற்றிருந்தது. கட்சிக் கொடி சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில் விஜய் அறிமுகப்படுத்தியதவெக கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை இடம்பெற்றிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விஜய் தலைமையிலான தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சின்னத்தை அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது எனவும் வாதிட்டார். ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய போது, தவெக கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் தவெக கட்சி தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கினை தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+