Cognizant ஐடி ஊழியர்களுக்கு பெரிய பிரச்சனை.. சென்னை தலைமை அலுவலகம் மாற்றத்தால் வந்த புதிய சவால்
சென்னை: இந்தியாவை பொறுத்தவரை காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் என்பது சென்னை துரைப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தலைமை அலுவலகம் துரைப்பாக்கத்தில் இருந்து மெப்ஸ் வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஊழியர்களுக்கு ஏற்படப்போகும் பிரச்சனை பற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு காக்னிசண்ட் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் என்பது சென்னையில் தான் அமைந்துள்ளது.

சென்னையில் காக்னிசண்ட்டின் தலைமை அலுவலகம் துரைப்பாக்கத்தில் இருக்கிறது. இங்கு அந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த அலுவலகம் நீண்ட பாரம்பரியத்தையும், காக்னிசண்ட் வரலாற்றில் மறக்க முடியாத நினைவுகளையும் கொண்டுள்ளது.
அதாவது காக்னிசண்ட் நிறுவனத்தில் இணை நிறுவனர்களான லட்சுமி நாராயணன், சந்திரசேகரன் ஆகியோர் இந்த அலுவலகத்தில் இருந்து தான் காக்னிசென்ட் நிறுவனத்தை Nasdaq-ல் மணி அடித்துத் துவங்கி வைத்தனர். இந்நிலையில் தான் தற்போது சென்னை துரைப்பாக்கத்தில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
துரைப்பாக்கத்தில் காக்னிசண்ட் தலைமை அலுவலகம் என்பது 15 ஏக்கர் நிலத்தில் 4 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ளது. இதனை ரூ.750 கோடி முதல் ரூ 800 கோடி வரை விற்பனை அந்த நிறுவனம் முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது. விரைவில் டீல் முடியும் என்று கூறப்படுகிறது. மேலும்துரைப்பாக்கத்துக்கு பதிலாக காக்னிசண்ட் நிறுவனம் தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் உள்ள மெப்ஸ் வளாகத்தில் தலைமை அலுவலகத்தை மாற்றம் செய்ய உள்ளது.
இந்த காக்னிசண்ட் நிறுவனத்துக்கு ஏற்கனவே மெப்ஸ், சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி உள்ளிட்ட இடங்களில் கட்டடங்கள் உள்ளன. அதனை மெப்ஸ் வளாகத்தில் தலைமை அலுவகத்தை திறந்து ஒருங்கிணைக்கும் முடிவில் காக்னிசண்ட் உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் துரைப்பாக்கம் அலுவலகத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதனால் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் காக்னிசண்ட் தலைமை அலுவலகம் என்பது சென்னை துரைப்பாக்கத்தில் இருந்து மெப்ஸ் வளாகத்துக்கு மாறிவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் காக்னிசண்ட் தரப்பில் பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த துரைப்பாக்கம் தலைமை அலுவலகத்தை விற்பனை செய்யும் பணியை காக்னிசண்ட், ஜேஎல்எல் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் பாஷ்யம் குரூப் மற்றும் காசாகிராண்ட் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தற்போது சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது துரைப்பாக்கத்தில் இருந்து மெப்ஸ் வளாகத்துக்கு தலைமை அலுவலகம் மாறும்போது அது அவர்களுக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிப்போருக்கு கூடுதல் நேரம் வாகனங்களில் பயணிக்க வேண்டி இருக்கும்.
நீண்டநேர பயணம் ஊழியர்களுக்கு மனஅழுத்தத்தையும், சேர்வையும் ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஊழியர்கள் தங்களின் பதிய அலுவலகத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இதனால் துரைப்பாக்கம் அலுவலகம் அருகே குடியிருக்கும் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். மேலும் புதிய இடத்தில் அலுவலகம் மாறும்போது வேலை செய்யும் சூழலும் மாறும். இதற்கு ஊழியர்கள் தங்களை தகவமைத்து கொள்ள வேண்டி இருக்கும்.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஒரே நேரத்தில் மெப்ஸ் வளாகத்தின் சுற்றிய இடங்களில் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இடம்பெயர விரும்பினாலும் அவர்களுக்கு அது பிரச்சனையை ஏற்படுத்த உள்ளது. அதாவது விரும்பிய மாதிரி வீடு கிடைக்காமல் போவதோடு, வீட்டின் விலையும் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு கூடுதல் நிதி செலவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications