சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.60,000.. திருச்சிக்கு ரூ.41,000.. இண்டிகோவால் விலை உயர்ந்த டிக்கெட்
சென்னை: பைலட்டுகள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் சென்னையில் இருந்து வெளியூருக்கான விமான கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கான விமான கட்டணம் ரூ.60 ஆயிரமாகவும், சென்னை - திருச்சி விமான கட்டணம் ரூ.41 ஆயிரமாகவும் உள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், டெல்லிக்கு செல்வதை விட கோவை, திருச்சிக்கான விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பைலட்டுகள் பற்றாக்குறைவால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் தற்போது டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த நிறுவனத்தில் நிலவும் பைலட்டுகள் பற்றாக்குறை தான் காரணம்.
இதனால் தற்போது பிற விமான நிறுவனங்கள் தங்களின் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளன. அதன்படி சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை விமான கட்டணம் இருக்கும். பண்டிகை காலங்களில் இந்த கட்டணம் இன்னும் கூடுதலாக உயரும். ஆனால் முதல் முறையாக ரூ.60 ஆயிரமாக விமான கட்டணம் அதிகரித்துள்ளது.
சென்னை - திருச்சி விமான கட்டணம் ரூ.41 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சென்னை - பெங்களூர் விமான கட்டணம் ரூ.17 ஆயிரமாக இருக்கிறது. சென்னை - டெல்லி விமான கட்டணம் ரூ.36,000 ஆக உள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கான டிக்கெட் கட்டணத்தை விட சென்னை - கோவை, சென்னை - திருச்சி இடையேயான விமான கட்டணம் அதிகமாக உள்ளது. இந்த விமான கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டில் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்த நிறுவனம் என்பது உள்நாட்டு சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இண்டிகோ விமான சேவைகள் கடந்த 1ம் தேதி முதல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் பணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்தியது தான் இதற்கு காரணம். அதாவது விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தங்களின் பணி நேரத்தை விட கூடுதலாக பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அதிகப்படியான விமானிகள், ஊழியர்கள் தேவையாக உள்ளது.
இதனை இண்டிகோ நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதும், தாமதமாக புறப்பட்டு செல்வதும் தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் 500 இண்டிகோ விமானங்களின் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 400 விமானங்கள் ரத்தாகி உள்ள நிலையில் 100க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பிற விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications