சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கார்டியன்கள்".. பயப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. சென்னை போலீஸின் சூப்பர் அதிரடி.. மக்கள் சல்யூட்

சென்னை போலீஸ் கொரோனா தடுப்பு பணியில் முழுவீச்சாக இறங்கி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "இனி யாருமே பயப்பட வேண்டாம்.. கார்டியன்களாக நாங்க இருக்கோம்" என்று சென்னை போலீஸ் மக்களுக்கு புது நம்பிக்கை தந்துள்ளது.. யாரெல்லாம் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களை கண்காணிக்க தனி வாட்ஸ்அப் குரூக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.. #GuardiansOfChennai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியும் வருகிறது.

இப்போதைக்கு அனைவரது கவனமும், எண்ணமும், நோக்கமும் தொற்றில் இருந்து சென்னை தப்ப வேண்டும் என்பதுதான்.. தொற்று உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என ஒருத்தரையும் விட்டுவைக்காமல் இந்த வைரஸ் கவ்வி வருகிறது.

chennai corona: salute to chennai police and trending hashtag #GuardiansOfChennai

இதனால், தமிழக அரசு ஒரு நிமிடத்தைகூட வீணாக்காமல் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான டாக்டர்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காக்க போராடி வருகிறார்கள். ஆனால் இன்னமும் சிலருக்கு பயம் வரவில்லை.. மாஸ்க் அணியாமல் சுற்றி கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, டெஸ்ட்டுக்கு வருபவர்களின் முழு செல்போன் நம்பர் உட்பட அட்ரஸ்கள் பெறப்பட்டது.. அவர்களுக்கு டெஸ்ட் உறுதியானால், அவர்களுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையும் தரப்படவே இந்த ஐடியாவை அமல்படுத்தினர்.. இப்படி டெஸ்ட்டுக்கு வந்த 277 பேரை காணவில்லையாம்.. இவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.. இவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

தீவிரம் எடுக்கும் கொரோனா.. மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை! தீவிரம் எடுக்கும் கொரோனா.. மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

இந்நிலையில், சென்னை போலீசார் அதிரடியாக களம் இறங்கி உள்ளனர்.. தொற்றை கட்டுப்படுத்த தங்கள் பங்களிப்பை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க தனியாக வாட்ஸ் அப் குரூப்கள் தொடங்கப்பட்டுள்ளன. வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கவே போலீஸ் ஸ்டேஷன்களில் இந்த வாட்ஸ் அப் குரூப்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொற்று இருப்போர்கள், அந்த குரூப்பில் இணைக்கப்படுவார்கள்.. அதன்மூலம் நோய் தொற்று எத்தனை பேருக்கு உள்ளது, ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளோர் எத்தனை பேர்? வீட்டில் கண்காணிப்பில் உள்ளோர் எத்தனை பேர் என்பதை அறிய முடியும்.

இதில் மற்றொரு நன்மை என்னவென்றால், இனி இவர்கள் எங்கேயும் ஓடி ஒளிய முடியாது.. தப்பி செல்லவும் முடியாது.. அப்படியே எங்கு தப்பி சென்றாலும் இவர்களின் நடமாட்டத்தை ஈஸியாக போலீசாரால் கண்காணிக்கவும் முடியும்.

சென்னை போலீசாரின் இந்த முயற்சிக்கும், நடவடிக்கைக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.. இவர்களின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளிக்கும் விதமாக, #GuardiansOfChennai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கியும் வருகின்றனர்.. அந்த ஹேஷ்டேக்கில் பலரும் காக்கி சட்டைகளுக்கு ஒரு பெரிய சல்யூட் அடித்து கை குலுக்கி வருகிறார்கள்.

English summary
chennai corona: salute to chennai police and trending hashtag #GuardiansOfChennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X