சென்னை மெரினாவா இது? அடியோடு மாறப்போகும் கடற்கரை.. புது திட்டத்தை கையில் எடுக்கும் மாநகராட்சி
சென்னை: உலகின் மிக நீண்ட கடற்கரை வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை மெரினா, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. இந்நிலையில் மெரினாவை மேலும் மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, அது மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை சென்னை மாநகராட்சி கூட்டம் கூடும்போதும், மெரினாவை மேம்படுத்த புதுப்புது யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த முறையும், புது யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதனை மாநகராட்சியின் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

அதாவது, சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் மெரினா பாரம்பரிய வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 2.9 கி.மீ தூரத்திற்கான மேம்பாட்டுப் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்பார்வையிடும். இந்தத் திட்டத்தின் கீழ் ஐந்து முக்கிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
I - 2.3 கி.மீ நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட செயற்கை மிதிவண்டி பாதை
II- காமராஜர் சாலையில் இருபுறமும் 9 பேருந்து நிறுத்தங்கள்
III- பாரம்பரியக் கட்டிடங்களைக் காண 9 பார்வை மேடைகள்
IV- மிதிவண்டிப் பாதையில் தெரு விளக்குகள் மற்றும் போலார்டு விளக்குகள் பொருத்துதல்
V- மூன்று காவல் சாவடிகளை அமைத்தல்
மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. மட்டுமல்லாது பைக் மற்றும் கார் பார்க்கிங்கும் இங்கு இருப்பதால் வாகனங்களின் நடமாட்டமும் அதிகம். எனவே சைக்கிளை இந்த சாலையில் ஓட்டுவது மிகவும் சிரமமான காரியமாக மாறியிருக்கிறது. பைக்குகள் அதிவேகத்தில் வருவதால் அது பாதசாரிகளுக்கும், சைக்கிளில் பயிற்சி செய்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தனியாக சைக்கிள் பாதை வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் 2.3 கி.மீ நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட செயற்கை மிதிவண்டிப் பாதை உருவாக்கப்பட இருக்கிறது. இந்த பாதையில் போலார்டு விளக்குகளும் அமைக்கப்படும்.
அதேபோல மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் ஏற்கெனவே பேருந்து நிறுத்தங்கள் இருக்கின்றன. இதனை மேம்படுத்தி, பயணிகளுக்கு வசதியாக அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படியாக மொத்தம் 5 திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
மெரினா பாரம்பரிய வழித்தடத் திட்டம் CMDA-வின் 2024-25 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மாநகராட்சி மன்றம் தடையில்லா சான்றிதழ் மற்றும் முன் அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ்தான் மேற்சொன்ன 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நடத்திய கள ஆய்வின்படி, திட்டமிடப்பட்ட பகுதிகள் காமராஜர் சாலையின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் அமைந்துள்ளன. சாலையின் கிழக்குப்பகுதியில் தோட்டப்பணி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் திட்டப் பணிகளின் விவரங்களை மாநகராட்சி தீர்மானிக்கும்.
தொழிலாளர் சிலையிலிருந்து 2.3 கி.மீ தெற்கில் உள்ள தோட்ட பகுதியில் 9 பார்வை மேடைகள் அமைக்கப்படும். வருங்கால திட்டங்களுக்கான தடையில்லா சான்றிதழ் மற்றும் முன் அனுமதி வழங்குவது குறித்து சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications