சென்னை மாநகராட்சி பட்ஜெட்: இறையன்பு சகோதரர் திருப்புகழின் திட்டங்கள் என்ன? பெரும் எதிர்பார்ப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிற நிலையில் மழை நீரால் சென்னை தத்தளிப்பதை தடுக்கும் விதமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழின் தலைமையில் குழுவினரின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சிங்கார சென்னை, டெட்ராய்டு ஆப் இந்தியா, வந்தாரை வாழ வைக்கும் ஆகிய பெருமைகளை கொண்ட தமிழக தலைநகர் சென்னை. இத்தனை பெருமைகள் இருந்தாலும் வடகிழக்கு பருவமழை காலம் வந்தால் போதும் சென்னை மழைநீரில் தத்தளிக்கும்.
மழை வடிகால் திட்டம் சரிவர இல்லாததால் சாலைகளில் மார்பளவுக்கு கூட தண்ணீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பைக்குண்டாக்கும். மழைக்காலம் முடிந்ததும் கோடைக்காலம் தொடங்கிவிடும்.

மழைக்காலம்
மழைக்காலத்தில் சரிவர தண்ணீரை தேக்கி வைக்காவிட்டால் இதனால் நீர் நிலைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே மழை பெய்தாலும் சரி மழை பெய்யாவிட்டாலும் சரி சென்னைக்கு பாதிப்பு என்பது அதிகளவில் இருக்கும். வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள், வடசென்னை, புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி இரு தளங்கள் வரை தண்ணீர் சூழ வாய்ப்புள்ளது.

மழை நீர் தேங்குதல்
ஒவ்வொரு மழை காலத்திலும் மழை நீர் தேங்குவதும், மக்கள் முக்கிய பொருட்களுடன் மொட்டை மாடியில் தஞ்சமடைவதும் அதிகாரிகள் பார்வையிடுவது என இருக்கிறது. ஆனால் மழை நீர் தேங்காத வண்ணம் இருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை செய்தது.

சென்னையில் அதிகபட்ச மழை
கடந்த நவம்பரில் சென்னையில் அதிகபட்ச மழை பெய்ததால் தலைநகரமே நீரில் தள்ளாடியது. இந்த மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அடுத்த பருவமழையின் போது மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

பேரிடர் மேலாண்மை துறை
அதற்கேற்ப பேரிடர் மேலாண்மை துறையில் அனுபவம் வாய்ந்த திருப்புகழ் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஒரு குழுவை அமைத்தார். இவர் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் மூத்த சகோதரர் ஆவார். குஜராத் நிலநடுக்கம், மழை வெள்ளக் காலங்களில் திருப்புகழின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது.

20 இடங்களில் தண்ணீர்
அந்த வகையில் அந்த குழுவினரின் அறிக்கையின் படி சென்னையில் அதிக அளவு நீர் தேங்கும் 20 இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதால் திருப்புகழின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மழைநீர் வடிகால் துறைக்கு ரூ 2000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications