தயவு செய்து புரிஞ்சுக்கோங்க.. வெள்ளம் புகுந்திடும்.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வார்னிங்
சென்னை: நீர் நிலைகளில் குப்பைகளை தயவு செய்து கொட்ட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக , கனமழையின் போது தண்ணீர் செல்வது தடுக்கப்படுவதுடன், அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடுகிறது என்று கவலை தெரிவித்தார்.
வடகிழக்கு பருவ மழை சென்னையில் தொடங்கிவிட்ட நிலையில், மழை காலங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுவதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் ஆற்றின் கரையோரங்கள், கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னையில் மழை தொடங்கிவிட்ட நிலையில், கால்வாய்களில் போடப்பட்டிருந்த குப்பைகளை விறுவிறுப்பாக அகற்றி வருகிறது சென்னை மாநகராட்சி. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் வெளியேறுவதற்கான வழிகளில் உள்ள அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று அரும்பாக்கம் மெட்ரோ ரயில் அருகே உள்ள பகுதியில் உள்ள கால்வாயில் குப்பைகளை அகற்றும் பணியினை ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு நீர் நிலைகளில் குப்பைகளை தயவு செய்து கொட்ட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை மக்களின் ஒத்துழைப்பு தேவை.
— Greater Chennai Corporation (@chennaicorp) November 6, 2023
குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டுங்கள்!
- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் Dr @RAKRI1 கோரிக்கை.#ChennaiCorporation | #ChennaiRains | #HereToServe pic.twitter.com/hJqaFZ8mWr
இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் கூறுகையில், " நாம் இப்போது பார்த்து கொண்டிருப்பது அரும்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதி. இந்த கால்வாய் விருகம்பாக்கம் நீர்வளத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் கால்வாய் ஆகும். 6.6 மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாயில் இவ்வளவு குப்பைகள் கொட்டப்பட்டிருக்கிறது. ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கிறது. ஏற்கனவே கழிவுகளை அகற்றினோம். ஆனால் இப்போது மழைக்கு இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் நிற்கிறது. இதை எடுக்குறது பெரிய விஷயம் இல்லிங்க. ஆனால் குப்பை போடுறவங்க தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். குப்பைகளை கொட்டினால் கால்வாய் அடைத்து கொள்ளும்.
"எனது குப்பை எனது பொறுப்பு" என்ற உணர்வுடன் செயல்படுவோம்!
— Greater Chennai Corporation (@chennaicorp) November 6, 2023
பிளாஸ்டிக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்ட வேண்டாம்!
-பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் Dr @RAKRI1 கோரிக்கை!#ChennaiCorporation#ChennaiRains#HeretoServe#NammaChennaiSingaraChennai pic.twitter.com/Chdp3G2x1P
மூன்று நாட்களுக்கு ஒரே நேரத்தில் கால்வாய்களை தூர்வாரினாலும், மக்கள் அதிகளவில் கழிவுகளை கொட்டுவதால், அடைப்பு ஏற்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஹெல்மெட், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் கால்வாயில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியால் 33 மைக்ரோ கால்வாய்களும், விருகம்பாக்கம் கால்வாய் உட்பட 14 நீர்வளத்துறை மூலமும் பராமரிக்கப்பட்டு வருகிறது.தண்ணீர் செல்வதற்காக நிறைய முயற்சி எடுத்து குப்பைகளை அகற்றினாலும், குப்பை போடுவதால் தான் தண்ணீர் தேங்குகிறது. தயவு செய்து பொதுமக்களே நீர் வழித்தட கால்வாய்களில் குப்பைகளை போடாதீர்கள்" இவ்வாறு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications