ஆம்புலன்ஸ் இல்லன்னா என்ன!.. கார்களை எல்லாம் ஆம்புலன்ஸா மாத்தலாமே.. மாத்தி யோசித்த ககன்தீப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் படுக்கை, ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிர் போகிறது என்றால் மறுபக்கம் நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாமல் உயிரிழக்கிறார்கள். இதை மனதில் கொண்டு சென்னை மாநகராட்சி ஆணையராக உள்ள ககன்தீப் சிங் பேடி என்ன செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.

Recommended Video

    Car-ஐ 108 Ambulance-ஆக மாற்றிய Gagandeep | Oneindia Tamil

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வட மாநிலங்களை போல் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் நடைபெறுகின்றன.

    மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமை, படுக்கை வசதி இல்லாமை உள்ளிட்டவைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மறுபக்கம் ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடுகள்.

    படுக்கை வசதி

    படுக்கை வசதி

    அதாவது மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதோர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அவர்களுக்கு அந்த ஆம்புலன்ஸிலேயே ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. மருத்துவர்களும் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

    ஆம்புலன்ஸ் நோயாளிகள்

    ஆம்புலன்ஸ் நோயாளிகள்

    இதனால் நாள்கணக்கில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் இருப்பதாக புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    சிறப்பு ஆம்புலன்ஸ்

    சிறப்பு ஆம்புலன்ஸ்

    இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பேரிடர் லீடர் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார்படுத்த உத்தரவிட்டார். அதாவது கார்களில் ஆம்புலன்ஸ் வசதிகளை மேற்கொள்வது. இதற்கு சிறப்பு ஆம்புலன்ஸ் பெயரிடப்பட்டுள்ளது.

    சுமையை குறைக்க

    108 ஆம்புலன்ஸ்களின் சுமையை குறைக்கவும் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ்கள் உதவும். சுமார் 15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவைகள் இயக்கப்படும். இதன் மூலம் இனி நோயாளிகள் வீட்டிலிருந்து மருத்துவமனைகளுக்கோ கொரோனா சிகிச்சை மையங்களுக்கோ செல்லலாம். ஆம்புலன்ஸ் இல்லாவிட்டால் என்ன கார்கள் இருக்கின்றனவே என செயலில் காட்டிவிட்டார் ககன்தீப் சிங்.

    இதை ஐஎம்சிஆர் ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில் நல்ல முன்முயற்சி, இந்த சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் நேரத்திற்கு நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர்களை காக்க முடியும். ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது அதிக பாரத்தை ஏற்றாமல் மற்ற வாகனங்கள் குறித்து யோசித்து புதுமையை புகுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+