வாட்ஸ் அப் செயலி மூலம் பெறப்படும் புகார்களை நீக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை: மழைக்கால நிவாரண நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நம்பரில் பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்து வந்தது.

மாநகராட்சியின் சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் பருவமழை குறித்து கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறவும், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும் 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணும் செயல்பட்டு வருகிறது. மேலும் 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்கிற உதவி எண் தற்போது மழை, வெள்ளத்தின் காரணமாக 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற 3 வாட்ஸ் ஆப் எண்கள் கூடுதலாக இன்று முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் ஆப் எண்களிலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கம், மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் இதரப் புகார்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications