"மொத்தமாக மாற போகுது.." சென்னையின் முக்கிய பகுதியில் வரும் மெகா மாற்றம்! இது யாரும் எதிர்பார்க்காதது
சென்னை: சென்னையின் முக்கிய பகுதி ஒன்றில் அட்டகாசமான மாற்றம் வர போகுகிறது. இது நகரவாசிகளின் அனுபவத்தை மொத்தமாகப் புரட்டிப் போடும் என்கிறார்கள் அதிகாரிகள். இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை மக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாண்டி பஜார்: அதன் ஒரு பகுதியாகவே சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பாண்டி பஜார் பகுதி கடந்த 2019இல் மொத்தமாக மாறியது. அங்கு தமிழ்நாட்டில் முதல் pedestrian plaza திறக்கப்பட்டது. அதாவது பாண்டி பஜார் பகுதியை முற்றிலும் நடந்து சென்றே ஷாப்பிங் செய்ய ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. நடைபாதைகள் அகலப்படுத்தப்பட்ட நிலையில், பாதசாரிகள் அமரவும் கூடுதல் பெஞ்சுகள் போடப்பட்டன. இது தவிர அந்த ஏரியாவை நடந்து சென்றே சுற்றிப் பார்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த மாற்றத்தை அனைவரும் கவனித்து இருப்பார்கள். இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தகட்டமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ் கான் சாலையிலும் இதேபோல பல மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். நகரின் இரண்டாவது pedestrian plazaவை அங்கு அமைக்கச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பார்கிங்: இந்த பணிகள் முடிந்த உடன் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து காதர் நவாஸ் கான் சாலையில் கூடுதல் கார்கள் மற்றும் டூவீலர்களை நிறுத்தும் வகையில், மல்டி லெவல் பார்கிங் வசதியை ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 100 டூவீலர்கள் மற்றும் 45 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்த ஏதுவாக பார்கிங் மையத்தை அமைக்கச் சரியான இடம் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
சென்னையை உச்சத்துக்கு கொண்டு போகும்.. சூப்பர் திட்டம்.. மெட்ரோ எடுத்த முக்கிய முடிவு.. அட இது செம
ஏற்கனவே இப்போது இருக்கும் பார்கிங் மையத்தைத் தாண்டி கூடுதல் வாகனங்களை நிறுத்த இந்த பகுதி டெவலப் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோரின் தேவையைப் போக்கும் வகையில், இங்கு மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.
ஆய்வு: இதற்கிடையே அந்த பகுதியை சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்திருந்தார்.. சாக்கடை மற்றும் இதர பாதாளச் சாக்கடைப் பணிகள் அங்கு நடக்கும் நிலையில், அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த பணிகளை முடித்தால் தான் பிளாசா பணிகளை எந்தவொரு இடையூறும் இல்லாமல் முடிக்க முடியும் என்பதால் ராதாகிருஷ்ணன் இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இப்போது வரை சாக்கடை, மழைநீர் வடிகால், ஆப்டிக் ஃபைபர் கேபிள் குழாய்கள், மின்சார கேபிள் குழாய்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் ஆகியவற்றின் பணிகள் 50% முடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "“ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த பணிகளை முழுமையாக முடித்துவிடுவோம். அடுத்து நடைபாதை விரிவுபடுத்தும் பணிகள் என பிளாசாவுக்கான பணிகளைத் தொடங்குவோம். வரும் ஜூன் 2025க்குள் இந்த பிளாசா பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.
இந்த பகுதியில் இருக்கும் பெரும்பாலானவை வணிக கட்டிடங்கள் தான்.. எனவே, அதையும் கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு வருவோருக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைத் தர நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், இங்கே கலைப் படைப்புகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
சூப்பர் நடவடிக்கை: பொதுவாக எந்தவொரு பகுதியாக இருந்தாலும் நடந்து சென்றால் தான் முழுமையாகச் சுற்றிப் பார்க்க முடியும். இதன் காரணமாகவே உலகெங்கும் பல நகரங்களில் உள்ள முக்கிய பகுதிகள் இதுபோல பிளாசாக்களாக டெவலப் செய்யப்பட்டுள்ளன. அதற்கு இணையாகச் சென்னையில் இவற்றை உருவாக்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் திட்டமாக இருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாகச் சென்று வரவும் இங்கே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications