சென்னை மக்களே கவனம்.. பிப்ரவரி 28 டூ மார்ச் 2 வரை இணையவழி சேவைகள் அதிரடி ரத்து - அறிவித்த மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சியில் பிப்ரவரி 28 ம் தேதி இரவு 10 மணி முதல் மார்ச் 2ம் தேதி இரவு 10 மணி வரை 2 நாட்கள் இணையவழி சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாம் அனைவரும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு தினசரி பணிகளை முடிக்கும் வகையில் தொழில்நுட்பம் என்பது வளர்ந்து விட்டது. சொல்லப்பபோனால் விரும்பும் உணவை இருந்த இடத்திலேயே இருந்து ஆர்டர் செய்து சாப்பிட முடிகிறது.

அதேபோல் சமையலுக்கு தேவையான பொருட்கள் உள்பட அன்றாட வாழ்க்கைக்கான அனைத்து பொருட்களையும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் பதிவு செய்து நம்மால் வாங்க முடிகிறது.
அந்த வகையில் ஒரு காலத்தில் நாம் தண்ணீர் வரி, தொழில் வரி, மின்கட்டணம் உள்பட பலவற்றுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் சென்றுவர வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை நாம் வீட்டில் இருந்தே இணையவழி சேவைகள் மூலம் செலுத்த முடியும். இதனால் நமது நேரமும் அலைச்சலும் மிச்சமாகிறது.
இப்படியான சூழலில் தான் சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் இணையவழி சேவைகள் 2 நாட்கள் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛பெருருநகர சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் பராமரிப்பு பணி காரணமாக 28.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 10 மணி முதல் 02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 10 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஏராளமான இணையவழி சேவைகள் மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பல்வேறு இணையவழி சேவைகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சொத்து வரி செலுத்துதல், சொத்துவரி ரசீது பெறுதல், சொத்துவரி கணக்கீடு, இணையதளம் மூலம் பணம் செலுத்துதல் மற்றும் ரசீது பெறுதல், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தல், தொழில் வரி மதிப்பீடு அழைப்பு குறிப்பேடு, அனைத்து தொழில்களுக்கும் உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவை இணையவழி சேவையாக உள்ளது.
இதுதவிர தொழில் வரி, தொழில் வரி கணக்கீடு, கட்டட அனுமதி திட்ட விண்ணப்ப படிவம் டவுன்லோட், கட்டிடத்தின் அனுமதி விதிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான விபரங்களை பெறுதல் உள்பட மேலும் பல சேவைகள் இணைவழி சேவையாக வழங்கப்படுகிறது. இதனால் தற்போதைய அறிவிப்பின்படி சென்னை மாநகராட்சி தொடர்பான பணிகளை இணையவழி சேவை வழியாக வரும் 28 ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை பயன்படுத்தி கொள்ள நினைப்பவர்கள் முன்கூட்டியே அதனை முடித்து கொள்வது நல்லது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications