இறை வணக்க நிகழ்ச்சியில் "ஆங்கிலத்தில்" பேச வேண்டும்.. சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: சென்னை மாநகராட்சிகளில் இறை வணக்க நிகழ்ச்சியின் போது மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடத்தில் ஆங்கில மொழி புலமையை அதிகரிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆங்கில மொழியாற்றலை அரசுப் பள்ளி மாணவர்கள் வளர்த்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆங்கில மொழியாற்றலை மேம்படுத்த..
பொதுவாக, தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும் போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் அவ்வளவாக இருப்பதில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்ற ஒற்றை காரணத்துக்காகவே அரசுப் பள்ளி மாணவர்களால் ஐடி நிறுவனங்கள் உட்பட பல மேலைநாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர முடிவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு, சமீபகாலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியாற்றலை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முழுவீச்சில் இறங்கிய சென்னை மாநகராட்சி..
குறிப்பாக, சென்னையில் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் இந்த நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆங்கில பாடவேளைக்கு முன்பாக மாணவர்கள் குறைந்தபட்சம் 2 நிமிடங்களாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. இதற்காக, மாணவர்கள் நூலகத்திற்கு சென்று குறிப்புகளை எடுத்து அதன் மூலமாக பயிற்சி பெறுகிறார்கள். இந்த நடைமுறையால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஓரளவுக்கு ஆங்கிலத்தை சரளமாக பேச முடிவதாக கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் இறை வணக்கம்..
இந்நிலையில், இதற்கு அடுத்தக்கட்டமாக இப்போது ஒரு புதிய உத்தரவு ஒன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் இறை வணக்கம் நிகழ்ச்சியில் வாரத்தில் ஒரு நாள் (புதன்கிழமை) சுழற்சி முறையில் மாணவர்கள் ஆங்கிலத்தில் இறை வணக்கம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். இந்த இறைவணக்கம் நிகழ்ச்சி சுமார் 17 நிமிடம் முதல் 18 நிமிடங்கள் வரை நடைபெற வேண்டும் சென்னை மாநகராட்சியின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் பாராட்டு..
இந்த நடவடிக்கையால் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனம் பல மடங்கு அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். "தாய்மொழி தமிழ் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆங்கிலமும் முக்கியம். ஏனெனில் ஆங்கிலம் சர்வதேச மொழியாக உள்ளதால் வேலைவாய்ப்புக்கு அது முக்கியமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் மாணவர்களின் ஆங்கிலப் புலமை அதிகரிக்கும்" என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications