பால் முகம் மாறாத சிறுவன்.. சாகும் வயசாப்பா உனக்கு.. பெரியமேடு நீச்சல் குளம் தற்காலிகமாக மூடல்
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அந்த நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது 7 வயது மகன் தேஜா குப்தா. கோடை விடுமுறையையொட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் அருகே உள்ள பெரியமேடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொடுப்பதால் அங்கு தானும் கற்க வேண்டும் என விரும்பினார்.

இதையடுத்து அந்த நீச்சல் குளத்தில் சிறுவன் கடந்த 10 நாட்களாக பயிற்சி பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் நேற்று காலை 8 மணி அளவில் தனது தாத்தாவுடன் நீச்சல் பயிற்சிக்காக சென்றுள்ளார். அந்த நீச்சல் குளத்தை சுற்றி பூங்கா இருக்கிறது. நீச்சல் குளத்திற்குள் வர பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை. அதனால் குழந்தைகளை பயிற்சியாளரிடம் சொல்லி விட்டுவிட்டு பெற்றோர் பூங்காவில் காத்திருக்க வேண்டும்.
அதனால் தேஜஸின் தாத்தாவும் அந்த பூங்காவில் காத்திருந்தார். இந்த நிலையில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாத நிலையில் அவரை பயிற்சியாளர்கள் தேடினர். எங்கு தேடியும் இல்லாததால் நீச்சல் குளத்தினுள் தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கியிருந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகியோர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு பிறருக்கு மரணத்தை விளைவித்தல் எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால்தான் சிறுவன் உயிரிழந்தான் என தந்தை புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சிறுவனின் தாத்தா கூறுகையில் தேஜஸ் நான் பார்க்கும் போது தண்ணீரில் நண்பர்களுடன் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் பயிற்சியாளர் எல்லாரையும் மேலே வருமாறு அழைத்தனர். எல்லாரும் வந்தனர். ஆனால் எனது பேரன் மட்டும் வரவில்லை. இதனால் நான் பயிற்சியாளரிடம் கேட்ட போது பாத்ரூம் போயிருப்பதாக சொன்னார். உடனே நான் பாத்ரூம் சென்று பார்த்தேன். அங்கே தேஜஸ் இல்லை.
திரும்பி வந்து சொன்ன போது பயிற்சியாளர்கள், ஒரு வேளை வெளியே போயிருப்பான் என பொறுப்பில்லாமல் சொன்னார்கள். அதற்கு நான் , இல்லை சார் அவன் மரியாதை தெரிந்த பையன் உங்களிடமோ என்னிடமோ சொல்லாமல் வெளியே போக மாட்டான் என்றேன். உடனே வேறு ஒரு பயிற்சியாளர் வந்து உங்கள் பேரன் கிடைத்துவிட்டான் என்றனர்.
போய் பார்த்தால் நீரில் கிடந்தான். அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அந்த இடத்தில் நிறைய குழந்தைகள் வருகிறார்கள். கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து புதிதாக கற்றுக் கொள்ளும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்றார். தேஜஸின் உடலை பார்த்து தாத்தா கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்க செய்தது.
இந்த சம்பவம் பூங்காவுக்கு வருவோருக்கும் அங்கு நீச்சல் கற்றுக் கொள்வோருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ள கட்டணமாக ரூ 1200 பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதால் பெரியமேடு நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications