சென்னையில் அனுமதி இன்றி சாலையில் பள்ளம் தோண்டும் அரசு துறை மீது போலீசில் புகார்.. மாநகராட்சி முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்து 623 கி.மீ. தூரத்துக்கு உட்புற சாலைகளையும், 387 கி.மீ. நீளத்தில் பேருந்து வழித்தட சாலைகளும் உள்ளன. பள்ளம் ஏற்படும் போது, சென்னை மாநகராட்சி தான் சாலைகளை சீரமைத்து வருகிறது.சென்னையில் மாநகராட்சியை தவிர மற்ற அரசு துறையினர் அனுமதி இன்றி சாலைகளில் பள்ளம் தோண்டுவதாலும் சிக்கல்கள் எழுகிறது.இதையடுத்து அனுமதியின்றி பள்ளம் தோண்டும், மற்ற அரசு துறையினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 5 ஆயிரத்து 623 கி.மீ. தூரத்துக்கு உட்புற சாலைகளையும், 387 கி.மீ. நீளத்தில் பஸ் வழித்தட சாலைகளையும் மாநகராட்சி பராமரிக்கிறது. சென்னையில் விபத்து ஏற்படாமல் இருக்க மாநகராட்சி சாலைகளை சரியாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Chennai Corporation to File Police Case Over Govt Department Digging Roads Without Permission

சென்னையில் பெரும்பாலும் மாநகராட்சி பள்ளம் தோண்டாது. மிக அபூர்வமாகவே பள்ளம் தோண்டும். ஆனால் மின்சார வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம், மெட்ரோ ரயில் ஆகிய துறைகள் தான் அதிக பள்ளம் தோண்டுகின்றன. இந்த துறைகள் பள்ளங்களை சரியாக மூடாமல் போனாலும், பள்ளத்தை தோண்டி பல நாட்கள் வேலை பார்த்தாலும், மாநகராட்சி தான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறது. பெரும்பாலான இடங்களில் மற்ற துறையினர் பள்ளம் தோண்டும் போது சரியாக மூடுவதுஇல்லை என்றபுகார்கள் எழுந்தது. அந்த நேரத்தில் கனமழை வந்தால் நிலைமை மோசமாகிவிடுகிறது. பணி முடிந்த பின்னர் பள்ளத்தை மூடாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடும் நிலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவர மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம். இந்த விவகாரம் குறித்து மற்ற அரசு துறை அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி ஆலோசித்தும் வந்துள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் சென்னையில் சாலைகளில் பள்ளம் தோண்டும் மற்ற துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் சாலை பராமரிப்பு என்பது மிகப்பெரிய பணியாக உள்ளது. ஆனால், குடிநீர் வாரியம் போன்ற பல்வேறு அரசு துறையினர் அவர்களின் பணியை முடிக்க சாலைகளில் பள்ளம் தோண்டுவது நடக்கிறது. பின்னர் அதை சரிவர மூடாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. மாநகராட்சிக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாநகராட்சி அனுமதியின்றி சாலைகளில் பள்ளம் தோண்டும் மற்ற அரசு துறையினர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறது.

ஏற்கனவே கோடம்பாக்கம் மண்டலத்தில் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் பள்ளம் தோண்டி பணிகளை செய்திருந்தார். அவ்ர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்த பின்னர் உடனடியாக அந்த பள்ளத்தை சீர்செய்து கொடுத்தார்கள். எனவே, இதுபோன்ற நடவடிக்கையை தடுக்க மற்ற துறையினர் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+