சிங்கார சென்னை 2.0: தேர்தல் முடிந்ததும்.. சொர்க்கபுரியாக மாறப்போகிறதாம் அடையாறு பாலம்! எல்லாமே பக்கா
சென்னை: சென்னை அடையாறு பாலங்கள் நடந்து செல்வோரின் சொர்க்கமாக விரைவில் மாறுவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை அழகுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் கொசு முட்டை ஒழிப்பு பணிகளும் செய்யப்பட்டன.
அது போல் புதிதாக சாலை அமைக்கும் போது மழை நீர் வீடுகளுக்குள் புகாதவாறு அந்த இடத்தின் புவியியல் அமைப்பின் படி உருவாக்கவும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. மேலும் ஏற்கெனவே போடப்பட்ட சாலைகளை அளவிட்டு அதில் உள்ள பிரச்சினைகளையும் களைந்து வருகிறது.

கூவம் ஆறு
சென்னையில் ஓடும் கூவம் ஆறு அந்த காலங்களில் கண்ணாடி போல் காட்சியளித்தது. ஆனால் தற்போது இந்த கூவம் ஆறு மிகுந்த துர்நாற்றத்துடன் சேறும் சகதியும் கால்வாய் தண்ணீர் ஓடுகிறது. இதனால் இதை பழையபடி அழகுப்படுத்தி படகுகள் விட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மழைகாலத்தில் கூவம், அடையாறு, பக்கிம்ஹாம் கால்வாய் உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்பட்டன.

சுத்தப்படுத்தும் பணிகள்
இந்த நிலையில் அசுத்தமான இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு அங்கு பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பசுமையாக காட்சியளிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருவிக நகருக்கும் கோட்டூர்புரத்திற்கும் இடையே உள்ள பாலத்தின் கீழ் அடையாறு ஓடுகிறது. இந்த பாலத்தை அழகுப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

2.50 கி.மீ. தூர பாலம்
அதன்படி மாநகர ஆறு மீட்பு திட்டத்தின் கீழ் இந்த அடையாற்றின் மீதுள்ள இரு பாலங்களை அழகுப்படுத்தும் பணிகள் சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இந்த பாலத்தின் நீளம் சுமார் 2.50 கி.மீ தூரம் உள்ள இந்த பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மரங்களை நடும் பணிகள் நடைபெறவுள்ளது.

தேர்தல் முடிந்தவுடன்
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில் பாலத்தை அழகுப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 19 ஆம் தேதி தேர்தல் முடிந்த பிறகு அந்த பணிகள் வேகப்படுத்தப்படும். கோட்டூர்புரம் ரயில்நிலையத்திற்கு எதிரே உள்ள இடத்தில் எதிரே பூங்கா, இரு ஹாக்கி மைதானங்கள் அமைக்கும் பணிகளும், நடைபெறுகின்றன.
Recommended Video

கோட்டூர்புரம் ரயில் நிலையம்
கோட்டூர்புரம் ரயில் நிலையம் எதிரே உள்ள காலி இடங்களில் மியாவாகி காடுகள் ஏற்படுத்தப்படுகிறது. அடையாற்றை பசுமையாக்கி பூங்கா அமைத்தால் அந்த பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். ஆற்றின் வடக்கே தடுப்பு அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தை அழகுப்படுத்தும் திட்டத்திற்காக ரூ 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த 11 கோடியில் கோட்டூர்புரம் பூங்கா மற்றும் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க ரூ 9 கோடி செலவிடப்படுகிறது. ரயில்நிலையம் அருகே உள்ள பழைய பூங்கா ரூ 1.50 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது என்றார் அந்த அதிகாரி. இனி அடையாற்றின் மீதுள்ள பாலத்தில் மூக்கை பிடிக்காமல் வாக்கிங் செல்லலாம்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications