செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு.. மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய மனுவை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக் குமார், இதய சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், அசோக் குமார் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர். இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை இவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சுமார் 5000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
அசோக் குமார் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு ஆஜராகவில்லை. அதன் பிறகு அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவானார். 2 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். தற்போது, அசோக் குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications