ம்ஹூம்.. மாறாத மீரா மிதுன்.. ஒருமுறை கூட ஆஜராகவில்லையாமே.. மீண்டும் சம்மன் அனுப்பியது சென்னை கோர்ட்
மீரா மிதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
சென்னை: பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் குற்றபத்திரிகை நகல் பெறுவதற்காக நடிகை மீராமிதுன் ஆஜராகாததால் ஜனவரி 11ம் தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து, மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர்...

சம்மன்
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை மாநகர காவல் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன்
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுனும் அவரின் நண்பரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன்
இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் சென்னை உயர் நீதிமன்றதில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் புழல் மகளிர் சிறையில் இருந்து மீரா மிதுன் வெளியே வந்தார். இதனிடையே, இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதன் நகல்களை கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அபிஷேக்
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரான நிலையில், நடிகை மீரா மீதுன் ஆஜராகவில்லை... அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், ஜாமீன் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீராமிதுன் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

நிபந்தனை
அப்போது நீதிபதி, நிபந்தனையை நிறைவேற்றவில்லை ஏன்றால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார்... பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications