சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு 20 கிலோ தங்கம் கடத்தல்! சிட்டாட்டம் பறக்க முயன்ற "குருவிகள்" கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வந்த பயணிகளை நள்ளிரவில் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்த சென்னை வந்த பயணிகளில் சிலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தனர்.
அவர்களை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் மொத்தம் ரூ 15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை 3 விமானங்களில் கடத்தி வந்த 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தும் வேலை செய்யும் குருவிகளாக ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இவர்களது பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் சென்னையில் முக்கிய தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை சிங்கப்பூருக்கு குருவிகளாக அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.ஒரே விமானத்தில் வந்தால் மொத்தமாக சிக்கி விடுவோம் என அஞ்சிய இவர்கள் 3 விமானங்களில் வந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications