20 சிகரெட்டுக்கான புகையை சுவாசிக்கும் சென்னை மக்கள்! உச்சத்தில் காற்று மாசு! டெல்லியும் தப்பவில்லை
சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை மற்றும் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் காற்று மாசு அளவு 400ஐ கடந்துள்ளது. அதேபோல தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டிருக்கிறது. காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் சுவாச கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இன்று இரவு நிலவரப்படி காற்று மாசு அளவு 500ஐ கடந்திருக்கிறது. காற்று மாசின் உச்சக்கட்டம்தான் 500. அதற்கு மேல் சென்றால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அளவு எண்களில் குறிப்பிடப்படுகிறது.

0 - 50 என இருந்தால் நல்லது எந்தவித பாதிப்பும் இல்லை. காற்றின் தரம் திருப்திகரமாக உள்ளது.
51 - 100 என இருந்தால் திருப்திகரமானது. எளிதில் நோய்வாய்ப்பட கூடிய நபர்களுக்கு லேசான சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.
101 - 200என இருந்தால் மிதமான மாசுபாடு என்று அர்த்தம். நுரையீரல் நோய் (ஆஸ்துமா), இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். ஆரோக்கியமான பொது மக்களுக்குப் பாதிப்பு குறைவு.
201 - 300 என இருந்தால் மோசமானது என அர்த்தம். பொதுமக்களில் பெரும்பாலோர் உடல்நலப் பாதிப்பை உணர வாய்ப்புள்ளது.
301 - 400 என இருந்தால் காற்று மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது என்று அர்த்தம். இது அவசரகால எச்சரிக்கை நிலையாகும். நீண்ட நேரம் வெளியில் இருப்பது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
401 - 500 என காற்று மாசு இருப்பின், அது கடுமையானதாகும். முழு மக்கள் தொகைக்கும் கடுமையான சுகாதார அபாயங்கள் ஏற்படும். அனைவரும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்திருந்தது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6-7 மணிவரையிலும், மாலை 7-8 மணி வரையிலும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னும் பின்னும் கூட பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட காற்று மாசு தற்போது பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை காற்று மாசு 400ஐ கடந்திருந்தது. சில இடங்களில் 999 என காற்று மாசு குறியீடு காட்டியிருந்தது. சென்னை மட்டுமல்லாது வேலூர், கோவை, திருச்சி, திருப்பூர் என பல உள் மாவட்டங்களிலும் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. காற்று மாசு காரணமாக சென்னையிலிருந்து திருச்சி சென்றுக்கொண்டிருந்த இன்டிகோ பயணிகள் விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல டெல்லியிலும் காற்று மாசு உச்சத்தை எட்டியிருக்கிறது. தமிழகத்தை போல டெல்லியில் பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்படவில்லை என்றாலும், சுற்றுப்புற மாநிலங்களில் உருவான மாசு, டெல்லியை சூழ்ந்திருக்கிறது.
பொதுவாக காற்று மாசை புகை பிடிப்பதுடன் ஒப்பிடுவது முற்றிலும் சரியானது கிடையாது. இருப்பினும், காற்று மாசு தீவிரத்தை உணர்த்தும் விதமாக சூழலியல் ஆர்வலர்கள் இந்த ஒப்பீட்டை செய்கின்றனர். அந்த வகையில் சென்னை மக்கள் ஒவ்வொருவரும் 20 சிகரெட் பிடிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது என்றும், டெல்லி மக்கள் 30 சிகரெட்டுகளை பிடிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications