சென்னையில் மது குடிக்க தண்ணீர் எடுத்து வர மறுத்தவர் காலால் மிதித்து கொலை.. ரவுடிக்கு ஆயுள் தண்டனை
சென்னை: கடந்த 2021ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மது குடிக்க தண்ணீர் எடுத்து வர மறுத்தவரை காலால் மிதித்து கொலை செய்துள்ளார் ரவுடி. அந்த ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்ன நடந்தது, நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சங்கர் கடந்த 2021ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே படுத்து துாங்கி உள்ளார். அப்போது, செல்வக்குமார் என்ற மஞ்சா செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மது குடிக்க வந்துள்ளனர்.

அப்போது, அங்கு துாங்கி கொண்டிருந்த சங்கரை எழுப்பிய செல்வகுமார் மது குடிக்க அருகில் இருந்த குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வரும்படி கூறியுள்ளார். அதற்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், சங்கரின் முகத்தில் காலால் மிதித்து தரையில் அமுக்கி, செல்வகுமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 16 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.அபிரகாம் லிங்கன் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வகுமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications