மகளிர் விடுதியில் சென்னை கலெக்டர் விஜயராணி அதிரடி ஆய்வு.. வாழைக்காய் பொரியல் செய்து அசத்தல்
சென்னை: சென்னை கலெக்டர் விஜயராணி இன்று மகளிர் விடுதியில் நேரில் ஆய்வு நடத்தினார்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள், துறை தொடர்பான ஐஏஎஸ் அதிகாரிகள் ஆங்காங்கே திடீரென்று சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், ரேஷன் கடைகளில் கலெக்டர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியாற்றுவோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.
மேலும், பள்ளி, கல்லூரிகளின் ஆய்வின்போது மாணவர்களுக்கு கலெக்டர்கள் பாடம் நடத்துவர். சத்துணவு மையங்கள், விடுதிகளில் சமைக்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா என்பதை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டும் ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தான் சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி விடுதி ஆய்வின்போது வாழைக்காய் பொறியல் சமைத்துள்ளார். இதுதொடர்பான விபரம் வருமாறு:

சென்னை கலெக்டராக இருப்பவர் விஜயாராணி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் விடுதிகளில் இன்று ஆய்வு செய்தார். அப்போது விடுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். விடுதி கட்டடங்களை முறையாக பராமரிக்க வேண்டும், அடிப்படை வசதிகளில் குறைகள் இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அவர் விடுதியின் சமையல் அறைக்கு சென்றார். அங்கு மதிய உணவுக்கான சமையல் தயாராகி கொண்டிருந்தது. வாழைக்காய் பொரியல் தயார் செய்ய சுறுசுறுப்பாக சமையல் நடந்தது. இதை பார்த்த கலெக்டர் விஜயாராணி, தாமாக முன்வந்து வாழைக்காய் பொரியல் செய்தார். மேலும், வாழைக்காய் பொரியல் செய்யும் பக்குவத்தையும் ஊழியர்களிடம் விளக்கினார். ஐஏஎஸ் அதிகாரியான விஜயாராணி விடுதியில் சமையல் செய்ததை அங்கிருந்த ஊழியர்கள் ஆச்சரியமாகவும், சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications