Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு பல் தான் ஆடுதுன்னு போனவரை நடைபிணமாக்கிய சென்னை பல் டாக்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதிக்கப்பட்ட ஒரு பல்லை பிடுங்க சென்ற போது, தவறான சிகிச்சையால் மொத்த பல்லையும் பிடுங்கி சுமார் 8 லட்சம் வரை மோசடி செய்ததாக மருத்துவர் மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

வடிவேலு ஒரு படத்தில் டாக்டர் வேஷம் போட்டு இருப்பார். அவரிடம் பல் பிடுங்க ஒருவர். அப்போது இரும்பு ராடை வைத்து பல்லை பிடுங்குவார் வடிவேலு.. அப்போது மீதம் பணம் அவரிடம் இருக்காது. இதையடுத்து மீதி சில்லறைக்காக நன்றாக இருந்த இன்னொரு பல்லையும் பிடுங்கிவிடுவார் வடிவேலு. இந்த காமெடி நமக்கு சிரிப்பை வரவழைத்திருக்கும்.

Chennai doctor who defrauded the person who went for tooth extraction of 8 lakhs

ஆனால் இங்கே ஒருவர் கடவா பல்லை பிடுங்க சென்ற நிலையில் சென்னை பல் டாக்டர் ஒருவர் அவரை நடைபிணமாக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தற்போது அவரது வாழ்க்கை நிலைகுலைந்து போய் உள்ளது.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சரவணன், இவர் கடவாய் பல்லில் ஏற்பட்ட வலி காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் மருத்துவராக உள்ள ரோஷன் என்பவர், சரவணனின் பல்லை பரிசோதித்துள்ளார்.

அப்போது கடவாய் பல் வயிற்றுக்குள் சென்றால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று அச்சுறுத்திய மருத்துவர் ரோஷன், கடவாய் பல்லை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் தவறான சிகிச்சை அளித்ததாகவும், அதனால் சரவணனுக்கு வாயினில் மற்ற பற்களுக்கு இடையே வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவர் ரோஷன் ஏதேதோ காரணங்கள் கூறி , சரவணனின் வாயில் ஆறு முறை அறுவை சிகிச்சை செய்ததுடன், அதற்காக ஒவ்வொரு கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கூறி 7.50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சரவணன் போலீசில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சரவணன் கூறுகையில், எனக்கு ஒரே ஒரு பல் தான் ஆடுகிறது என்று மருத்துவமனை சென்றேன். ஆனால் பல்லு வைக்கிறேன்.. பல்லு வைக்கிறேன் என்று சொல்லி தாடையே இல்லாம ஆக்கிட்டாரு மருத்துவர்.. அதற்கு அப்புறம் பிளாஸ்டிக் சர்ஜரி பண்றேன்னு சொல்லி பணம் கொடுங்க என்று 8 லட்சம் வரை வாங்கிட்டாரு.. ஆனால் ஒவ்வொரு முறை பல் எடுத்த போதும், எனக்கு ஒரு பகுதியே பல் இல்லாமல் போனது தான் மிச்சம் என்று வேதனையுடன் கூறினார்.

இதனிடையே அவர் குடிக்கும் தண்ணீர் கூட மூக்கின் வழியாக கொட்டுவது தான் வேதனையின் உச்சம்.. இதனிடயே தன்னுடைய சிகிச்சையில் குணம் அடையாததால். உடனடியாக வேறு ஒரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த மருத்துவர் ரோஷன், சிகிச்சைக்கான கட்டணத்தை அவரே செலுத்துவதாக சரவணனிடம் உறுதி அளித்தாராம்.

அதனை நம்பி சரவணன் அங்கு சென்ற போது,மருத்துவ கட்டணத்தை செலுத்தாமல் மருத்துவர் ஏமாற்றியது சரவணனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தனது வீட்டை அடமானம் வைத்து சிகிச்சைக்கான பணத்தை கட்டி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார் சரணவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+