ஒரு மெசேஜ் வீட்டுக்கே வரும் போதை! ஓட்டலில் உல்லாச விருந்து! கடத்தல் வில்லியான கல்லூரி மாணவி டோக்கஸ்
சென்னை : சென்னை அண்ணாநகர் மது விருந்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சமுக வலைதளங்கள் மூலமாக கண்காணித்து வந்த போலீசார், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்
.மூலம் போதை பொருட்களை விற்று வந்த 2ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் அமைந்துள்ள பாரில், கடந்த 21ம் தேதி பிரேசில் நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற மந்த்திரா கோமரா என்பவரின் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் சட்ட விரோதமாக விடிய விடிய மது விருந்து நடந்தது.
இதுபற்றி அறிந்த அரும்பாக்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

போதை பார்ட்டி
அப்போது ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார், இந்த மது விருந்து குறித்து விசாரித்தனர். அப்போது, கூட்டத்தின் நடுவே மயங்கி கிடந்த, மடிப்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியர் பிரவீன் என்பவரை எழுப்பியபோது அவர் மூச்சு பேச்சற்று மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்சில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் அதிரடி
இதையடுத்து, அந்த மாலில் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட 3 பார்களுக்கு அமைந்தகரை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார் மேலாளர்களான அண்ணாநகரை சேர்ந்த நிவாஸ் , எட்வின் மற்றும் அங்கு ஊழியராக பணிபுரிந்த பரத் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.

தீவிர கண்காணிப்பு
இந்த போதை மருந்து விற்பனை கும்பல் மற்றும் போதை விருந்து கும்பல் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பார்களிலும் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இளைஞர் பலியான வணிக வளாகத்தின் அருகிலேயே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

இளம்பெண்ணும் கைது
அப்போது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது அவர் சென்னை அயனாவரத்தில் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பதும் போதை மருந்து மற்றும் போதை ஸ்டாப்புகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த அப்துல்ஹமீத், கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண்ணான டோக்கஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதிர்ச்சி தகவல்
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஸ்டாப்புகளை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நேரில் வந்து விற்பனை செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியானது இதையடுத்து அவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கைதான இளம்பெண் அடையாறு பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது
-
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications