சென்னை ஈசிஆர் ரோட்டில் திருதிருன்னு விழித்த இளசுகள்.. கிழக்கு கடற்கரை சாலையில் போலீஸ் அதிரடி.. சபாஷ்
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் பைக் ரேஸ்களில் இளைஞர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்புகளை கையில் எடுத்துள்ளனர்.
சமீப காலமாகவே சோஷியல் மீடியாவின் கவனத்தை தங்கள் மீது திருப்புவதற்காக இளைஞர்கள் பலர் ரிஸ்க் எடுத்து வருகிறார்கள்.. குறிப்பாக, தங்களது பைக் சாகசங்களை வலைதளங்களில் பதிவிட்டு, அதற்கான லைக்குகளை அள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

கரணம்: ஆனால், கரணம் தப்பினால் மரணம் என்பதை மறந்து செயல்படுவதால், விபத்துக்களிலும் இந்த இளைஞர்கள் சிக்கிவிடுகிறார்கள்.. நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, சாலை விபத்துகள் தமிழகத்தில்தான் அதிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இந்த விபத்தில் சிக்குவோர் பெரும்பாலும் 15 வயதிற்கு மேல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்தான்.
அதிலும், ரேஸ் பைக்குகளில் ஈடுபட்டு தங்களது விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துவிடுகிறார்கள்.. இளைஞர்கள் பைக் மோகத்தில் சாலைகளில் வித்தைகள் காட்டினால், அதனால் ஏற்படும் விபரீதங்களும் அதிகமாகும்.. ரேஸ் பைக் ஓட்டும்போது, எதிரே வருவோரும் சில சமயங்களில் விபத்துகளில் சிக்கி விடுகிறார்கள்.. அதனால்தான், பைக் ரேஸ்கள் குறித்து நம்முடைய போலீசாரும் தொடர்ந்து கண்காணித்தபடியே உள்ளனர்.
புத்தாண்டு: ஆனால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல், சென்னையில் வார இறுதி நாள்களிலும் பைக் ரேஸ்கள் நடப்பதும், இதனால், அப்பாவிகள் பலியாவதும் தொடர்கதையாகி வருகின்றன. பெரும்பாலானோர் ஹெல்மெட் கூட போடுவதில்லை.. அதிலும், சிலசமயம், நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு, போட்டோ ஷூட் எடுக்கிறார்கள்.. பைக்கில் 'வீலிங்' செய்வதால், பின்னாடி வரும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள்..
இந்த காஸ்ட்லி பைக்குகள் நவீன வசதிகள் கொண்டவையாக இருக்கின்றன.. ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை குறைவான நேரத்தில் கடப்பது தொடர்பாக பந்தயம் கட்டி ரேஸில் ஈடுபடுகின்றனர். அதிவேகத்தில், பலத்த சப்தத்துடன் சாலைகளில் இந்த பைக்குகள் பறக்கும்போதுதான் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.
ஈசிஆர்: நேற்றுகூட சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸில் சில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.. கோவளம் அடுத்த குன்னுக்காடு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது 50-க்கும் மேற்பட்ட காஸ்ட்லி பைக்குகளில் இளைஞர்கள் சிலர் ரேஸில் ஈடுபட்டிருப்பதை பார்த்த போலீஸார், அவர்களை மடக்கி பிடித்து, அறிவுரைகளை சொல்லி வார்னிங் தந்து அனுப்பினார்கள்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பைக் ரேஸ்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன.. குறிப்பாக, சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்டவற்றில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருவதால், போலீசார் தொடர்ந்து அந்த பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications