வானில் திடீர்னு பறந்த இளைஞர்.. சென்னை மெரினா பீச்சில் யாருங்க இது? போலீஸ் கடிவாளம் போட்டும் அடங்கலயே
சென்னை: சென்னையில் பைக் ரேஸ்களில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.. அப்படியிருந்தும், இளைஞர் ஒருவர் பொதுமக்களையே அலற விட்டுள்ளார்.
சமீப காலமாகவே சோஷியல் மீடியாவின் கவனத்தை தங்கள் மீது திருப்புவதற்காக இளைஞர்கள் பலர் ரிஸ்க் எடுத்து வருகிறார்கள்.. குறிப்பாக, பைக் சாகசங்களை நடத்தி காட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

விபத்துக்கள்: கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும்கூட, இந்த இளைஞர்கள் செயல்படுவதால்தான், சாலை விபத்துகளும் தமிழகத்தில் பெருகி வருகின்றன. இவர்களில் பலர் ஹெல்மெட்கூட போடுவதில்லை.. அதிவேகத்தில், பலத்த சப்தத்துடன் சாலைகளில் இந்த பைக்குகள் பறக்கின்றன.. அதுவும், நைட் நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் தான், விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன..
இந்த விபத்தில் சிக்குவோர் பெரும்பாலும் 15 வயதிற்கு மேல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்தான் என்று புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.. ரேஸ் பைக் ஓட்டும்போது, இந்த இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், எதிரே வருவோரும் அப்பாவி மக்களுக்கும் பல நேரங்களில் ஆபத்து நேரிடுகிறது.. அதனால்தான், பைக் ரேஸ்கள் குறித்து நம்முடைய போலீசாரும் தொடர்ந்து கண்காணித்தபடியே உள்ளனர்.. சிலர், நடுரோட்டில் பைக்கி நிறுத்திவிட்டு, போட்டோ ஷூட் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஈசிஆர் ரோடு: 15 நாட்களுக்கு முன்புகூட, ஈசிஆர் ரோட்டில் பைக் ரேஸில் சில இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.. கோவளம் அடுத்த குன்னுக்காடு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், 50-க்கும் மேற்பட்ட காஸ்ட்லி பைக்குகளில் இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்..
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தபோதுதான், அவர்கள் அனைவருமே இளைஞர்கள் என்று தெரியவந்தது. பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அறிவுரைகளை சொல்லி, வார்னிங் தந்து அனுப்பி வைத்தார்கள்.
எனினும். சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளில், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களில் போலீசார் பேச்சு கேட்காமல் உள்ளவர்களின் லைசென்ஸ்களும் அதிரடியாக ரத்து செய்யப்படுகின்றன.
கடிவாளம்: இவ்வளவு கடிவாளம் போட்டும்கூட, சில பகீர் சம்பவங்கள் நடந்து விடுகின்றன.. நேற்றுகூட, சென்னை மெரினா பீச் ரோட்டில் ஒருவர் சாகசம் செய்து, ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் திருப்பி வருகிறார்.
இந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை.. பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. போக்குவரத்தை விதிகளை மீறியும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், மிகவும் ஆபத்தான முறையில் இந்த பைக் சாகசத்தை நடத்தியிருக்கிறார்.. அதாவது, பின்னாடியிலிருக்கும் சக்கரத்தை மட்டுமே ஓட்டி, பைக்கை ஓட்டி செல்கிறார்.. இதனை வீடியோவாக எடுத்து, தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்..
வீடியோ: இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் பதறிப்போய்விட்டார்கள்.. ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த வீடியோவை போஸ்ட் செய்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை வைத்து, காற்றை கிழித்து கொண்டும் பீச் ரோட்டில் பைக்கில் பறக்கும் இந்த இளைஞர் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications