Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளியலறையில் அந்த கோலத்தில் பிரபலம்.. சென்னை ஈசிஆர் வீட்டில் ஆசை பட பாணியில் பிளாஸ்டிக் கவர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் 'சிசிடிவி' கேமரா வியாபாரி குடும்பத்தோடு இறந்து கிடந்த சம்பவம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அவர்கள் தற்கொலை செய்தனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்றே தெரியவில்லை.. இதனால் குழம்பி போயிருக்கும் போலீசார் இந்த பயங்கர சம்பவம் குறித்த விசாரணையை உடனடியாக ஆரம்பித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா.. 56 வயதான இவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார்.. இவரது மனைவி ரேவதிக்கு 46 வயதாகிறது.. இவர்களுக்கு 15 வயதில் ரித்விக் அர்ஷத், 11 வயதில் தித்விக் அர்ஷத் என்ற இரு மகன்கள் உள்ளனர்..

Chennai ECR Neelankarai

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச் தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா மொத்த விற்பனை கடையை நடத்தி வருகிறார் சிரஞ்சீவி..

அன்பான மனைவி, அழகான குழந்தைகள்

சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகன் அர்ஷத் 10ம் வகுப்பும், தித்விக் அர்ஷத் 7ம் வகுப்பும் படித்து வந்தனர். சோழிங்கநல்லூரில் ஸ்கூல் இருப்பதால், மகன்கள் வசதிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஈசிஆர் ரோட்டிலுள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு குடி வந்துள்ளார்..'சாகாஷ் வைபவ் என்கிளைவ் என்ற அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் சிரஞ்சீவி

பல வருட காலமாகவே ரிச்சி தெருவில் வியாபாரம் செய்து வரும் சிரஞ்சீவிக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது.. ஆனால், கொரோனா தாக்கம் வந்தபிறகு தொழிலில் மந்த நிலையும், இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய பிசினஸை விரிவுபடுத்த பல கோடிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது கடன் கொடுத்த நபர்கள் எல்லாம் சிரஞ்சீவியை பணம் கேட்டு நெருக்கடி தர துவங்கிவிட்டார்களாம். எலக்ட்ரானிக் பொருட்கள் விலைக்கு வாங்கியவர்களும், அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம்.. இதனால், கடுமையான கடனில் சிக்கி, மன உளைச்சலுக்கு ஆளானார் சிரஞ்சீவி.

ரேவதிக்கு மிரட்டல்

இப்படிப்பட்டசூழலில், கடன் கொடுத்தவர்கள் சிரஞ்சீவியின் மனைவி ரேவதிக்கு போனை போட்டு பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் தம்பதிக்கு இடையே தினந்தோறும் தகராறு வெடித்துள்ளது.

நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு ஆளானதால், நேற்று அதிகாலை 4.10 மணிக்கு சிரஞ்சீவி, சேலத்திலுள்ள மாமா முரளி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.. இதற்கு பிறகு தூங்கி எழுந்த முரளி தன்னுடைய செல்போனை பார்த்தபோது, சிரஞ்சீவி ரூ.1 லட்சம் பணம் அனுப்பியதற்கான மெசேஜ் இருந்துள்ளது.

ஈசிஆர் ரோட்டில் தொழிலதிபர்

எதற்காக இந்த பணத்தை அனுப்பினார்? என்று கேட்பதற்காக சிரஞ்சீவிக்கே மாமா முரளி போன் செய்துள்ளார்.. ஆனால், சிரஞ்சீவி போன் எடுக்கவேயில்லை.. இதனால், சாலிகிராமத்திலுள்ள ரேவதியின் தம்பி சாய்கிருஷ்ணாவிடம் சொல்லி, சிரஞ்சீவியின் வீட்டுக்கு நேரிலேயே சென்று பார்க்க சொல்லி உள்ளர்..

உடனே சாய் கிருஷ்ணாவும் ரேவதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு திறந்தே கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தால் பெட்ரூமில் ரேவதியும், 2 மகன்களும் சடலமாக கிடந்துள்ளனர்.. அவர்களது முகம், பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு கிடந்தது.. சிரஞ்சீவி பெட்ரூமிலிருந்த பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.. அவரது கால்கள் கட்டப்பட்டிருந்தன.. கை மணிகட்டு, கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

கடிதம் சிக்கியது

இதையெல்லாம் பார்த்துவிட்டு அலறியடித்து கொண்டு வெளியே வந்த சாய் கிருஷ்ணா, உடனே நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து சிரஞ்சீவி, ரேவதி, 2 மகன்களின் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு அந்த வீடு முழுவதும் சோதனை நடத்தியபோது, கடிதம் ஒன்று சிக்கியது.. தற்கொலைக்கு முன்பு, தமிழில் அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார் சிரஞ்சீவி.

அந்த கடிதத்தில் "பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் எதையும் இதற்கு மேல் திருப்பி செலுத்த முடியவில்லை.. எனவே சிரஞ்சீவி என்னும் நான், எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்கிறேன். எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பல்ல. இதை நான் எல்லோருக்கும் தொிவித்துக் கொள்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.

கடன் தொல்லை

அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. சிரஞ்சீவி யார், யாரிடம் கடன் வாங்கினார்? யார் யார் சிரஞ்சீவியை மிரட்டினார்கள்? கடைசியாக சிரஞ்சீவிக்கு போனில் பேசியவர்கள் யார் யார்? ரேவதியை போனில் மிரட்டியவர்கள் யார் யார்? என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கடன் தொல்லை அதிகமாகிவிட்டதால், முதலில் தான் மட்டுமே தற்கொலை செய்ய நினைத்துள்ளார்.. ஆனால், தன்னுடைய தற்கொலைக்கு பிறகு கடன் கொடுத்தவர்களால் ரேவதிக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்து வரும் என்று நினைத்துள்ளார்.

அதனால் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு, அதற்கு பிறகே சிரஞ்சிவி பாத்ரூமில் தன்னுடைய கால்களை தானே கயிறால் கட்டி, கழுத்தையும் அறுத்து கொண்டு தற்கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரேவதியின் கையெழுத்து

ஆனால், சிரஞ்சீவி எழுதிய கடிதத்தில் மனைவி ரேவதியும் கையெழுத்து போட்டிருக்கிறாராம்.. இது போலீசாருக்கு லேசான சந்தேகத்தை தந்துள்ளது. தற்கொலை கடிதத்தில் கையெழுத்து போட்ட ரேவதியை, பிளாஸ்டிக் கவரால் மூடி ஏன் சிரஞ்சீவி கொல்ல வேண்டும்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒருவேளை ரேவதிக்கு தற்கொலை செய்ய விருப்பமில்லாமல் இருந்து, அவர் நன்றாக தூங்கியதுமே வலுக்கட்டாயமாக பிளாஸ்டிக் கவரால் அழுத்தி கொன்றுவிட்டு, அதே பாணியில் 2 பிள்ளைகளையும் கொன்றிருக்கலாமோ? ரேவதியின் சம்மதத்துடன் கொன்றதை நம்ப வைக்க, கடிதத்தில் ரேவதியின் கையெழுத்தை அவரே போட்டு இருக்கலாமோ? என்றெல்லாம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனவே இந்த சம்பவத்தின் உண்மை என்னவென்று, முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்கிறார்கள் போலீசார்..

சேலத்துக்காரர் சிரஞ்சீவி

தொழிலதிபர் சிரஞ்சீவி பூர்வீகம் ஆந்திர மாநிலம் என்றாலும், அவரது அப்பா ஜானகிராமன் குப்தா சேலத்தில் வசித்து வந்தவராம். சிரஞ்சீவியும் சேலத்தை சேர்ந்தவர்தான்.. 45 வயதான இவர் BBA படித்துள்ளார்..

திருமணத்திற்கு பிறகுதான் சென்னைக்கு வந்து பாரிமுனை ரிச்சி தெருவில் சிசிடிவி என்ற கண்காணிப்பு கேமரா விற்பனை கடையை நடத்தி வந்துள்ளார்.. ஈஞ்சம்பாக்கம் வீட்டுக்கு குடிவந்து 3 மாதம்தான் ஆகிறதாம்.

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "இச்சம்பவத்தை பார்க்கும்போது, சிரஞ்சீவி, மனைவி மகன்களை பாலித்தீன் பைகளால் முகத்தை மூடி, தலையணையால் அமுக்கி கொலை செய்து, தன் கை, கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளது தெரிகிறது.

சந்தேக கேள்விகள்

அதேவேளையில், கடிதம் சிரஞ்சீவி எழுதினாரா? முரளிக்கு ஒரு லட்சம் ரூபாய் எதற்கு அனுப்பினார்? தனி ஆளாக மனைவி, மகன்களை கொலை செய்தாரா, வேறு யாராவது உடன் இருந்தார்களா? கதவு திறந்து இருந்ததால், வேறு யாராவது உள்ளே புகுந்து கொலை செய்து கடிதம் எழுதி வைத்தார்களா? இவர்கள் அனைவருமே கொலை செய்யப்பட்டார்களா? என்றெல்லாம் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன.

எனவே கைரேகை நிபுணர்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, முழு விபரம் தெரியவரும். உறவினர்கள், நண்பர்கள், கடை ஊழியர்கள், கடன் கொடுத்தவர்களிடம் தீவிரமாக விசாரிக்கிறோம்" என்றனர்.

சென்னை நீலாங்கரையில் சிசிடிவி' கேமரா வியாபாரி குடும்பத்தோடு இறந்து கிடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+