சென்னை - திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில்.. இரவு 11.10 மணிக்கு எழும்பூரில் புறப்படுகிறது
சென்னை: தொடர் விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை வெள்ளிக்கிழமையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதன் பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இந்நிலையில் தான் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

பஸ், ரயில்களில் அதிகளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தான் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூர் - திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் 06161) இன்று இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
அதன்பிறகு இரவு 11.40 மணிக்கு தாம்பரம், 12.10 மணிக்கு செங்கல்பட்டு ஸ்டேஷனில் இருந்து புறப்படும். பிறகு இரவு 12.35 மணிக்கு மேல்மருவத்தூர், இரவு 1 மணிக்கு திண்டிவனம், இரவு 2.30 மணிக்கு விழுப்புரம், இரவு 2.57 மணிக்கு பண்ரூட்டி, 3.32 மணிக்கு கடலூர், 4.04 மணிக்கு சிதம்பரம், 4.22 மணிக்கு சீர்காழி ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்.
அதன்பிறகு அதிகாலை 4.52 மணிக்கு மயிலாடுதுறை, 5.30 மணிக்கு கும்பகோணம், 5.42 மணிக்கு பாபநாசம், 6.02 மணிக்கு தஞ்சாவூர், 6.22 ணிக்கு புடலூர், 6.40 மணிக்கு திருவெறும்பூர் ரயில் நிலையங்களை அடைந்து புறப்படும். இறுதியாக காலை 7.30 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது என்பதால் ஸ்டேஷன்களில் டிக்கெட் எடுத்து பொதுமக்கள் பயணிக்கலாம்.
மறுமார்க்கமாக வரும் 17 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு திருச்சியில் இருந்து திருச்சி - சென்னை தாம்பரம் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06162) புறப்பட்டு மறுநாள் (திங்கட்கிழமை - ஆகஸ்ட் 18) காலை 6.10 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications