சென்னை மின்சார ரயில்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதா தெற்கு ரயில்வே? மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடம் என்பது சென்னையின் இதயம் போன்றது. இதில் மின்சார ரயில் சேவை என்பது மிகமிக முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. இதில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகள் 115 ரயில் சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில ரயில்நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் செல்கின்றன.அதற்கான காரணங்கள் மற்றும் சிக்கல்களை பார்ப்போம்.
சென்னையில் மின்சார ரயில் சேவை என்பது மிகமிக அத்தியாவசியமான ரயில் போக்குவரத்தாக உள்ளது. இதில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஓடுகிறது என்றால் பிரதான வழித்தடம் என்பது கடற்கரை செங்கல்பட்டு வழித்தடம் தான்.இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ஒரு நாள் சரியாக ஓடாமல் போனால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடம் ஆகும். ஆனால் கடந்த சில நாட்களாக பெருமளவு ரயில் சேவை குறைக்கப்பட்டது..

மறுசீரமைப்பு பணி
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 720 கோடியில் பிரம்மாண்ட வசதிகளுடன் விமான நிலையம் போல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 2027-க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி 1.5 லட்சம் பயணிகள் மற்றும் 46 விரைவு ரயில்களை கையாளும் வகையில் ரயில் நிலையம் மாற்றப்பட உள்ளது.
காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இருபுறமும் புதிய G+2 முனையக் கட்டிடங்கள், இரு நுழைவாயில்களிலும் G+5 அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், பயணிகள் நெரிசலின்றி செல்ல 72 மீட்டர் அகல மேம்பால நடைபாதை, அனைத்து நடைமேடைகளிலும் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய 18 மீ மற்றும் 36 மீ அகல நடை மேம்பாலங்கள், 11 நடைமேடைகளையும் உள்ளடக்கிய 25 மீட்டர் உயர ஒருங்கிணைந்த கூரை போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.
ரயில் சேவை
இதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த 20-ந்தேதி முதல் நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு, 164 ரயில் சேவைகளாக இயக்கப்பட்டு வந்தது.
மின்சார ரயில் சேவை குறைப்பு
மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் ஆங்காங்கே மின்சார ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டிய சூழ்நிலை ரயில்வேக்கு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறாக்ள். ரயில்வேயின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 164 ரயில் சேவையில் இருந்து 49 ரயில் சேவைகள் ரத்து செய்து, 115 ரயில் சேவைகளாக குறைக்கப்பட்டிருக்கிறது.
எரிகிற நெருப்பில் எண்ணெய்
அதுமட்டுமின்றி, கூடுதலாக எழும்பூர்-கூடுவாஞ்சேரி, பரங்கிமலை-கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் இருமார்க்கமாகவும் 26 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த ரயில் சேவை மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கான புதிய கால நேர அட்டவணை ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி வருகிற ஏப்ரல் 5-ந்தேதி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தசேவை குறைப்பு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் சிக்கல் என்பதே வேறு.. பலருக்கும் புரியதா சிக்கல்களை விரிவாக பார்க்கும் முன்பு புதிய அட்டவணையை முதலில் பார்ப்போம்
கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடம்
கடற்கரை-செங்கல்பட்டு: காலை 3.30, 3.55, 4.20, 5.10, 5.35, 6, 6.25, 6.50, 7.40, 8.30, 9.20, 9.45, 10.45, 11.30, 11.55.
மதியம் 12.20, 1.35, 2. மாலை 3.15, 3.40, 4.05, 4.30, 4.55, 5.15, 5.35, 5.55, 6.25, 6.40 (விரைவு).
இரவு 7.05, 8.20, 8.45, 9.35, 10, 10.25.
கடற்கரை-தாம்பரம்: காலை 8.55, 10.25, 11.05. மதியம் 1.10, 2.25. இரவு 9.10, 10.45, 11.05, 11.30, 11.59.
தாம்பரம்-செங்கல்பட்டு: காலை 4.45, 6, 7.15.
கடற்கரை-காஞ்சிபுரம்: காலை 4.45, இரவு 7.30.
கடற்கரை-திருமால்பூர்: காலை 7.15, மதியம் 2.50, இரவு 7.55.
கடற்கரை-அரக்கோணம்: மதியம் 12.45, மாலை 6.10 (விரைவு), 6.55.
தாம்பரம்-செங்கல்பட்டு (ஏ.சி.மின்சார ரயில்): காலை 6.50.
செங்கல்பட்டு-கடற்கரை வழித்தடம்
செங்கல்பட்டு-கடற்கரை:
காலை: 4, 4.30, 4.50, 5.25, 5.55, 6.40, 6.55, 7.15, 8.25, 8.35, 9.20, 10.40, 11, 11.30.
மதியம்: 12, 1.10, 1.45, 2.20.
மாலை: 3, 4.20, 4.55, 5.30, 6, 6.15, 6.40.
இரவு: 7.10, 7.35, 7.50, 8.20, 9.15, 10.20, 11.
தாம்பரம்-கடற்கரை: காலை 3.30, 4, 4.30, 7.35, 9.15, மதியம் 1.50, மாலை 3.05, 4.20, 5.10.
செங்கல்பட்டு-தாம்பரம்: காலை 7.30, இரவு 8.10.
காஞ்சிபுரம்-கடற்கரை: காலை 6.10, 9.30.
அரக்கோணம்-கடற்கரை: காலை 4.40, 7.30 (செமி பாஸ்ட்), மாலை 5.15.
திருமால்பூர்-கடற்கரை: காலை 7 (விரைவு), 11.05, இரவு 8.
செங்கல்பட்டு-எழும்பூர்: காலை 7.40, 8.05, 8.45 (செமி பாஸ்ட் ரயில்கள்).
செங்கல்பட்டு-கடற்கரை (ஏ.சி. மின்சார ரயில்): காலை 7.50.
சிறப்பு மின்சார ரயில்கள்
எழும்பூர்-கூடுவாஞ்சேரி, பரங்கிமலை-கூடுவாஞ்சேரி, எழும்பூர்-செங்கல்பட்டு, தாம்பரம்-பரங்கிமலை, தாம்பரம்-எழும்பூர், கூடுவாஞ்சேரி-பரங்கிமலை, கூடுவாஞ்சேரி-எழும்பூர், செங்கல்பட்டு-எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே 26 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
அதற்கான கால நேர அட்டவணை விவரம்:
பரங்கிமலை-கூடுவாஞ்சேரி: காலை 7, 9.35, 11.50, மதியம் 2.10, மாலை 4.30, 6.55, இரவு 9.20, 10.
எழும்பூர்-கூடுவாஞ்சேரி: காலை 8.35, 11.15. (இந்த ரயில்கள் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் நிற்காது).
எழும்பூர்-செங்கல்பட்டு: மதியம் 2.15, மாலை 6.30. (இந்த ரயில்கள் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் நிற்காது).
தாம்பரம்-பரங்கிமலை: காலை 6. (இந்த ரயில் பல்லாவரத்தில் நிற்காது).
தாம்பரம்-எழும்பூர்: காலை 7.20 (இந்த ரயில் பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டில் நிற்காது).
கூடுவாஞ்சேரி-பரங்கிமலை: காலை 8.35, 10.35, மதியம் 1, மாலை 3.10, 5.30, இரவு 8. (இந்த ரயில்கள் பல்லாவரத்தில் நிற்காது).
கூடுவாஞ்சேரி-எழும்பூர்: காலை 9.55, மதியம் 12.35. (இந்த ரயில்கள் பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டில் நிற்காது).
கூடுவாஞ்சேரி-எழும்பூர்: மாலை 4.10, இரவு 8.30. (இந்த ரயில்கள் பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டில் நிற்காது).
கூடுவாஞ்சேரி-தாம்பரம்: இரவு 10.20, 11.
மேற்கண்ட அட்டவணை படிதான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நடைமுறை சிக்கல் என்னவென்றால், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்கள் சில குறிப்பிட்ட நிலையங்களில் நிற்காமல் செல்கின்றன. அதுவும் சிக்கலை அதிகமாக்கி உள்ளது. அதன் விவரம்
எழும்பூர் - கூடுவாஞ்சேரி/செங்கல்பட்டு ரயில்கள்: இந்த ரயில்கள் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மற்றும் கோடம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
கூடுவாஞ்சேரி - எழும்பூர் ரயில்கள்: இந்த ரயில்கள் பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மற்றும் சேத்துப்பட்டு ஆகிய நிலையங்களில் நிற்காது.
தாம்பரம் - எழும்பூர் ரயில் (காலை 7.20): இது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மற்றும் சேத்துப்பட்டு ஆகிய நிலையங்களில் நிற்காது.
கூடுவாஞ்சேரி - பரங்கிமலை மற்றும் தாம்பரம் - பரங்கிமலை ரயில்கள்: இவை பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிற்காது.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரயில் சேவை குறைப்பு காரணமாக அலுவலகம், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரயில் சேவை பாதிப்பு காரணமாக, தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகமாக உள்ளது.
கூடுதல் பேருந்து சேவைகள்
இதனை கருத்தில்கொண்டு, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் யானை பசிக்கு சோளப் பொறி என்பது போல் உள்ளதாகவும், விரைவில் ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நிற்காத இடங்கள்
உண்மையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பிரச்சனை என்றால் மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பல்லாவரம் ஆகிய இடங்களில் ரயில்கள் நிற்காமல் செல்வது தான் இப்போதைய பெரிய சிக்கலுக்கு காரணமாக மக்கள் பார்க்கிறார்கள்.
எழும்பூரில் என்ன சிக்கல்
எழும்பூரில் நடைபெறும் இந்தப் பணியின் காரணமாக, ரயில்கள் வழக்கமான நடைமேடைகளுக்குப் பதிலாக எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடைகளில் (5, 6) இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் நேர நெரிசலைத் தவிர்க்கவும், ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிடாமல் விரைவாகச் செல்லவுமே (Skip) இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் நடைமுறை சிக்கலை இன்னும் அதிகமாக்கி உள்ளது.
தாம்பரத்தில் ரயில்கள்
அதேபோல் மின்சார ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில்களை இயக்கலாமே.. சிறிது காலத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களையும் தாம்பத்தில் இருந்து இயக்கலாமே. எழும்பூர் அவசியமே இல்லையே.. சேத்துப்பட்டுடன் திரும்பி வர வைக்கலாமே என்று மக்கள் யோசனை கூறுகிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது..
சேத்துப்பட்டில் ரயில்கள் திருப்பிவிட வசதிகள் இல்லை
ஏனெனில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்களைத் திருப்பி விடுவதற்கான கட்டமைப்பு வசதிகள் தற்போதைக்கு இல்லை. ரயில்கள் திரும்புவதற்கு எழும்பூர் அல்லது கடற்கரை நிலையங்களுக்குச் சென்றே ஆக வேண்டும். இந்த வசதி என்பது ஆங்காங்கே சில முக்கிய ரயில் நிலையங்களில் தான் உள்ளது. அத்துடன் எழும்பூர் ஒரு பிரதான சந்திப்பு நிலையம்.. அங்கிருந்துதான் வடக்கே கடற்கரைக்கும், மேற்கே அரக்கோணம் போன்ற பகுதிகளுக்கும் ரயில்கள் பிரிகின்றன. எழும்பூரைத் தவிர்த்தால், அந்த இணைப்புச் சங்கிலி அறுந்துவிடும். ரயில்களை திருப்பிவிட முடியாமல் போகும்..
தாம்பரம் முனையம்
தாம்பரத்தை ஒரு முழுமையான முனையமாக மாற்றும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இருப்பினும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களையும் தாம்பரத்திற்கு மாற்றினால், சென்னையின் மையப்பகுதிக்கு வரும் பயணிகளுக்கு அது கூடுதல் சுமையாகவும், தாம்பரத்தில் பெரும் நெரிசலையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
தற்போதைய சிக்கல் (ஏப்ரல் 5 வரை) என்ன
தற்போது எழும்பூரில் மின்சார ரயில் நடைமேடைகளில் (Platform 10 & 11) பணிகள் நடப்பதால், அந்த ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் நடைமேடைகளுக்கு (Platform 5 & 6) மாற்றப்பட்டிருக்கிறது.
ரயில்கள் ஏன் நிற்கவில்லை
ஏன் சில கோடம்பாக்கம் சேத்துப்பட்டு பல்லாவரம் ஆகிய இடங்களில் நிற்கவில்லை? எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் அதே பாதையில் மின்சார ரயில்களையும் இயக்குவதால், அவை எல்லா இடங்களிலும் நின்றால் பின்னால் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகும். இதனால்தான் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் போன்ற நிலையங்களை "Skip" செய்ய வேண்டிய கட்டாயம் ரயில்வேக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ரயில்வே முக்கியமான விஷயத்தை செய்துவிட வேண்டும்.. பயணிகளின் வசதிக்காக எழும்பூர் பணிகளை விரைந்து முடிப்பதோடு, புறநகர் ரயில் சேவைகளுக்கெனத் தனிப்பாதையை முழுமையாக உறுதி செய்ய வேண்டும்.. அப்படி செய்தால் தான் தப்பிக்க முடியும்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications