யுபிஎஸ்சி: தமிழகத்தில் முதலிடம் பெற்ற எலக்ட்ரீஷியனின் மகள்.. சபாஷ் ஜீஜீ! விவசாயி மகளும் சிறப்பிடம்
சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் விவசாயியின் மகளும் எலக்ட்ரீஷியனின் மகளும் சாதித்துள்ளார்கள். எந்த வித பின்புலமும் இல்லாமல் இவர்கள் சாதித்ததை பாராட்டி வருகிறார்கள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்து முடிந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு எழுதினார்கள்.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரி முதல் மே மாதம் வரை நேர்முகத் தேர்வு நடந்தது. இந்த இறுதித் தேர்விலும் வென்றவர்களின் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தேர்வில் 933 பேர் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இந்த தேர்வில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்துள்ளார்கள். இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் சாதனை படைத்துள்ளார். 39 மாணவர்கள் தேர்ச்சி பெறறுள்ளார்கள்.
இவர்களில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தவர் சென்னையை சேர்ந்த ஜீஜீ. இவர் 107ஆவது ரேங்க் பெற்றுள்ளார். இவர் பெரம்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வருகிறார். ஜீஜீ சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். முதல் முயற்சியிலேயே இவர் இந்த தேர்வை எழுதி வென்று தமிழகத்தில் முதல் மாணவியாக திகழ்கிறார்.
கடலூர் அருகே ஒரே வீட்டில் இருந்து இரு சகோதரிகள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன். இவரின் மகள் சுஷ்மிதா ராமநாதன். இவர் குடிமை பணித் தேர்வில் அகில இந்தியத் தர வரிசையில் 528ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சுஷ்மிதாவின் தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். அவர் அப்போது தமிழக அளவில் 2ஆவது இடத்தையும் அகில இந்திய அளவில் 47ஆவது இடத்தையும் பெற்றிருந்தார். எந்த பின்புலமும் இல்லாமல் விவசாயியின் மகள்கள், எலக்ட்ரீஷியனின் மகள் தலைமை நிர்வாக பணிக்கு தேர்வாகியுள்ளதை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications