சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை.. இரவோடு இரவாக பல ஏரியாக்களில் வெளுக்கிறது!
சென்னை: இன்று நள்ளிரவு 1 மணிக்குள் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 11 மணியளவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், அசோக்நகர், தியாகராய நகர், சைதாப்பேட்டை, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அம்பத்தூர், கொளத்தூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், நங்கநல்லூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளான சேலையூர், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
நள்ளிரவு 1 மணிக்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து இன்று (நவம்பர் 29 ஆம் தேதி) காலை வரை ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. பின்னர், வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, இன்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
தொடர்ந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுநாள் (நவம்பர் 30 ஆம் தேதி) காலை, காற்றின் வேகத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே, வடதமிழகம் - புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் 65 கி.மீ வேகத்தில் வீசும், இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications