பிரபல ஜவுளிக்கடையில் துணி எடுத்த பெண்.. சுற்றிலும் பலர் இருக்க.. யாரந்த பீகார் நபர்? சென்னையில் பரபர
சென்னை: சென்னையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் நபர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். மாஜி அதிமுக பிரமுகர் நேற்றைய தினம் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. இந்த நபரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
சென்னையில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார்கள்.. அத்துடன், பெண்களின் வேலைவாய்ப்பிற்கு மிகவும் உகந்த சூழலையும், பாதுகாப்பையும் உருவாக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

சைபர் கிரைம்: எனினும், சென்னையில் இந்த ஆண்டு மட்டும் கொரியர் பார்சல் மோசடி போன்ற சைபர் கிரைம் மூலமாக 132.46 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சைபர் கிரைம் குற்றங்களையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் மும்முரமாகி வருகின்றனர்.
அதேபோல, ஆசை வார்த்தைகளால் ஏமாறப்படும் அப்பாவி பெண்கள், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு வரும்நிலையில், அவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள். பெண்களுக்கு பாலியல் சீண்டல் செய்பவர்களையும் உடனடியாக கைது செய்து வருகிறார்கள்.
நேற்றைய தினமும், படப்பை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் என்ற 60 வயது நபர், தன்னுடைய வீட்டில் குடியிருந்த 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கைதானார். வீட்டை காலி செய்த பிறகும்கூட, பொன்னம்பலம் அப்பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்..
ஜாமீன்: நேற்று விடிகாலை 5 மணிக்கு, பொன்னம்பலம் அந்தப் பெண்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று, பாலியல் தொந்தரவு தந்தபோது, ஆத்திரமடைந்த பெண்கள் பொன்னம்பலத்தை துடைப்பத்தாலேயே அடித்துள்ளனர். இந்த வீடியோவை கண்ட போலீசார் உடனடியாக பொன்னம்பலத்தை கைது செய்தனர். ஆனால், உடல்நலம் கருதி நேற்றிரவே ஜாமீனில் வந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்றையதினம் எழும்பூர் பகுதியில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் ஒருவரும் கைது கைதாகி உள்ளார். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞராம்.. இது தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
துணிக்கடை: அந்த அறிக்கையில், "சென்னை, கீழ்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 30 வயது பெண் நேற்று ஜனவரி 28ம் தேதி மதியம் எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள துணிக் கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர் பெண்ணிடம் அவதூறாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மேற்படி பெண், எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பீகார் இளைஞர்: எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சூளை ஹைரோடு பகுதியில் வசிக்கும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சீத்தாராம் தாக்கூர் மகன் அசோக் தாக்கூர் (34) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அசோக் தாக்கூர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (29.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications