இரவோடு இரவாக பறந்த மேட்டர்.. தொப்பைக்கட்டையா நனைந்த உதயநிதி.. களமிறங்கிய ஸ்டாலின்.. மீள்கிறது சென்னை
சென்னை: கடந்த 2015ஐ போலவே, சென்னையின் சாலைகளில் கடல் போல தேங்கிகிடக்கும் தண்ணீரை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள். இதையடுத்து போர்க்கால அடிப்படையிலான அரசின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகி வருகிறது.
சென்னையை ஒரு புரட்டு புரட்டிபோட்டுவிட்டு போய்விட்டது இந்த மிக்ஜாம்.. ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள், நீரில் மூழ்கிவிட்டன.. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், தண்ணீரில் அடித்து செல்வதை கலங்கிப்போய் பார்த்து கொண்டு நின்றனர் அதன் உரிமையாளர்கள். தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள் சேதமாகி உள்ளன..

கடைகள்: அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என பாரபட்சமின்றி வெள்ள நீர் புகுந்து நிரம்பியுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையே கிட்டத்தட்ட ஒரு தீவு போலவே ஆகிவிட்டது.. ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த தண்ணீரில் நின்றுகொண்டுதான், பொளந்து கட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திமுக அரசு தீவிரப்பணிகளை மேற்கொண்டுள்ளது.
மரங்கள்: முறிந்து விழுந்த மரங்கள் ஒருபக்கம், பலத்த காற்று மறுபக்கம் என கொட்டும் மழைக்கு நடுவில், மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை.. இடைவிடாமல் மழை பெய்து வருவதால், நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது என்றாலும், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து களப்பணிகளில் நேற்று முன்தினம் முதலே ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இந்த பணிகளை, சென்னைவாசிகள் நெகிழ்ந்து பாராட்டியும், நன்றி சொல்லியும் வருகின்றனர். அதேபோல, கடந்த 2 நாட்களாகவே உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சென்னைவாசிகளின் கவனத்தை திருப்பி வருகின்றன.. மழை கோட் அணிந்துகொண்டு, முகமெல்லாம் ஒருவித கலக்கமும், பதற்றத்துடன், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் உதயநிதியின் போட்டோக்களும் வெளியாகியபடி உள்ளன.
உதவிகள்: தன்னுடைய தொகுதி என்றில்லாமல், பாதிக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ, அங்கெல்லாம் சென்று நேரில் சந்தித்து, உதவி அளித்து வருகிறார் உதயநிதி.
முக்கியமாக, திருவல்லிக்கேணி பகுதி, மாட்டாங்குப்பம், மற்றும் வி.ஆர். தெரு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அத்துடன், தண்ணீர் தேங்கிய பகுதிகள், சேதமடைந்த வீடுகள் என மழையாலும் - காற்றாலும் ஏற்பட்ட பாதிப்புகளையும் மக்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தந்து கொண்டிருக்கிறார்.
பேரிடர்கள்: "அரசு - கழகத்தினர் தன்னார்வலர்கள் - பொதுமக்கள் என ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பேரிடரிலிருந்தும் மீண்டு வருவோம்" என்று உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அது தொடர்பான போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார்.
அதேபோல, அரசின் நிவாரண பணிகள் நாலாபக்கமும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையின் கீழ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன..
இதைத்தவிர, வெளியூர்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலைமுதல் தண்ணீர் வடிய துவங்கி இருக்கிறது என்றாலும், இன்று இரவுக்குள் அனைத்தும் வடிந்துவிட வாய்ப்பில்லை என்கிறார்கள்.
நள்ளிரவு: நேற்று நள்ளிரவிலும்கூட, மழை பாதிப்பு பகுதிகளிலுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு போனை போட்டு, பணிகளை விரைவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.. இன்று காலையில், நேரடியாகவே முதல்வர் ஸ்டாலின் களத்திற்கு வந்துவிட்டார்..
சென்னை சென்ட்ரல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதுடன், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும் சந்தித்து பேசினார்.. பிறகு, வேறு பல்வேறு பகுதிகளிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தேவையான வசதிகளை உடனே செய்துதரம்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மீளும் சென்னை: முதல்வர் களத்தில் இறங்கியதிலிருந்தே, அமைச்சர்களும், அதிகாரிகளும் நாலாபக்கமும் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.. சுறுசுறுப்புடன் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்..
வெள்ளத்தை வடிய வைக்கும் வேலையிலும், பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையிலும் ஒட்டுமொத்த தமிழக அரசும் தீயாய் செயல்பட்டுவருகிறது. மிக்ஜான் ராட்சசனிடமிருந்து மெல்ல மெல்ல தங்களை விடுவித்து வருகிறது தலைநகரம்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications