கமல் வர்றார்னா மோட்டாரை நிப்பாட்டுவிங்களா? காங்., எம்எல்ஏ வாக்குவாதம்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர், கருணாநிதி தெருவில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் கமல்ஹாசன் வருகைக்காக வெள்ள நீரை வெளியேற்றாமல் பல மணி நேரம் மோட்டார்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு உதவிய KamalHassan

    சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து பெய்து வந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையில் இருந்து சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 நாட்களாக பார்வையிட்டு வருகிறார். சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட மோட்டார்கள் அரசின் நிதியில் தனியார் நிறுவனம் மூலம் களமிறக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை

    இந்த நிலையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர், கருணாநிதி தெருவில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். திட்டப்படி கமல்ஹாசன் தரமணியில் இருக்கும் ராம்நகர் பகுதியில் சோதனை செய்வதாக இருந்தது. அங்கு வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதாக இருந்தது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    ஆனால் அங்கு ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக அங்கு மோட்டார்கள் மூலம் நீர் மொத்தமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. இதனால் அங்கு கமல்ஹாசன் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்துதான் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகரில் ஆய்வு மேற்கொள்ள கமல்ஹாசன் சென்றுள்ளார்.

    தரமணி

    தரமணி

    ஆனால் அங்கு ஏற்கனவே மோட்டார் போட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்துள்ளது. கமல் வருவதற்குள் மொத்தமாக அங்கு தண்ணீர் வெளியேறும் நிலை இருந்தது. இதனால் அங்கு கமல் வரும்வரை 3 மணி நேரம் தண்ணீரை வெளியேற்றாமல் தடுத்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கமல் வந்து பார்வையிடும் வரை 3 மணி நேரமாக மோட்டரை இயங்க விடாமல் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தடுத்து வைத்துள்ளனர்.

    தண்ணீர்

    தண்ணீர்

    இந்த தண்ணீர் வெளியேற்றும் பணிகள் தமிழ்நாடு அரசு நிதியில் தனியார் மூலம் செய்யப்படுகிறது. அந்த தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி தண்ணீர் வெளியேற்றுவதை மநீம நிர்வாகிகள் தடுத்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது. விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா உடனே மோட்டரை இயக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

    தடுப்பு

    தடுப்பு

    யாரை கேட்டு மோட்டரை நிறுத்தினீர்கள். கட்சி காரர்கள் சொன்னால் நிறுத்திவிடுவீர்களா.. அரசு உங்களுக்கு உத்தரவிட்டதா என்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின் பேசிய கமல்ஹாசன், மழையால் பாதிக்கப்படும் சம்பவம் வருடா வருடம் நடப்பதை தெரிந்து கொண்டும் அதை சரி செய்யாமல் எதிர்பாராத பேரிடராக பருவ மழையை பேரிடராக மாற்றுவது நம்முடைய கவனக்குறைவு தான். பட்டா கிடைக்காததால் போதும் என்ற நிலை இல்லாமல் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை செய்பவர்களை தடுக்க எந்த கட்சியினராக இருந்தாலும் துணிந்து குரல் தர வேண்டும்.

     கண்டனம்

    கண்டனம்

    இங்கே மோட்டார் நிறுத்தி வைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானது. ஒருவேளை எங்கள் கட்சியினர் மோட்டார்களை நிறுத்தி வைத்து இருந்தால் அது மிகவும் தவறு. அப்படி செய்திருக்க கூடாது. நாங்கள் வருவதால் தான் மோட்டார் பம்பு இங்கு வந்து உள்ளது. எங்களின் வருகையால் நீர் வெளியேற்றப்படுகிறது என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். ஆனால் இங்கு 2 நாட்களாகவே மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+