சென்னையில் பெரு வெள்ளம்.. பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. முழு விவரம்
சென்னை: சென்னையில் நேற்று மாலை தொடங்கிய பேய் மழை இன்று அதிகாலை வரை பெய்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் இரவு மட்டும் மொத்தம் 207 மிமீ மழை பெய்துள்ளது.
சென்னை நகரின் எழும்பூர், கிண்டி, தியாயராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், பழவந்தாங்கல்,பல்லாவரம்,தாம்பரம் என பல பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரு வெள்ளம்
சென்னையின் பல இடங்களில் சாலையில் ஆறுபோல் வெள்ளநீர் ஓடியது. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினும் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ரயில் போக்குவரத்து சேவை பாதிப்பு
கனமழை காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்ததால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்களை பாதுகாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகறது.

15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
இந்த நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மண்டலத்துக்கு ஒருவர் வீதம் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் விவரம்
மண்டல வாாரியாக நியமிக்கப்பட்ட அந்த அதிகாரிகளின் விவரம் பின்வருமாறு:-
மண்டலம் 1 : ஏ.கே.கமல் கிஷோர்; மண்டலம் 2 : கணேசன்; மண்டலம் 3 : சந்தீப் நந்தூரி; மண்டலம் 4 : டி.ஜி.வினய்; மண்டலம் 5 : மகேஸ்வரி ரவிக்குமார்; மண்டலம் 6 : பிரதீப் குமார்; மண்டலம் 7 :சுரேஷ்குமார்; மண்டலம் 8 : எஸ்.பழனிசாமி; மண்டலம் 9 : ராஜாமணி; மண்டலம் 10 : எம்.விஜயலட்சுமி; மண்டலம் 11 : சங்கர்லால் குமாவத்; மண்டலம் 12 : எல்.நிர்மல் ராஜ்; மண்டலம் 13 : எஸ்.மால்விழி; மண்டலம் 14 : சிவஞானம்; மண்டலம் 15 : வீரராகவ ராவ்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications