சட்டென வந்து நின்ற சிவ்தாஸ் மீனா! அரண்டு போன அதிகாரிகள்.. சத்தமின்றி "ரெய்டு".. மகிழ்ச்சியில் சென்னை
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள், கால்வாய் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் ரூ.308.75 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கத் திட்டப்பணிகளான கூடுதல் பொருட்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணி உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.08.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த வர்த்தக மையத்தில் 9,00,000 சதுர அடி பரப்பளவில் ரூ.308.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், 1300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் அவர்கள், வேலையாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து திட்டப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவும், ஜனவரி 2024ல் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு சிறப்புற நடைபெறும் வகையில் இக்கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அசோக் நகர் 4ஆவது அவென்யூவில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 1.64 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணியினையும், மூலதன நிதியில் ரூ.23.45 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 5.29 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, அயனாவரம் டேங்க் சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.7.27 கோடி மதிப்பீட்டில் 1,820 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, ஸ்டீபன்சன் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் தொட்டி அமைக்கும் பணி மற்றும் நீர்வளத்துறையின் சார்பில் ஓட்டேரி நல்லா கால்வாயில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 10.84 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, பருவமழைக்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக இப்பணிகளை முடித்திட தொடர்ந்து, கணேசபுரம் சுரங்கப்பாதை அருகில் இரயில்வே துறையின் மூலம் மழைநீர் கால்வாய் (Culvert) அமையவுள்ள இடத்தினையும், காந்தி இர்வின் சாலையில் இரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் சார்பில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் (Culvert) அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு, இப்பணிகளை தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டு மேற்கொள்ள தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன். இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு. ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையர் பணிகள் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இரயில்வே கோட்ட மேலாளர் திரு. விஷ்வநாத் ஈரியா அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், தொடர்புடைய துறைகளின் தலைமைப் பொறியாளர்கள், தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications