சென்னைக்கு திரும்புகிறது ராட்சச நிறுவனம்.. ஆட்டோமொபைல் உலகை ஆட வைக்க போகும் சம்பவம்.. செம
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் மீண்டும் தொழில் தொடங்க உள்ளது. சென்னையில் மூடப்பட்ட தொழிற்சாலையை அவர்கள் தொடங்க உள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தொழிற்சாலை மூடல்: தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் . என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இந்த சந்திப்பு பெரிதாக பலன் அளிக்கவில்லை.
இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இதையடுத்து இந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோசனைகள்: அதே சமயம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமும் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியது. சென்னை மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலையை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு தொழிற்துறை சில பெரிய நிறுவனங்களுடன் பேசி வருகிறதாம். சில "பிக் நேம்" அதாவது பெரிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்த தொழிற்சாலையை வாங்க உள்ளதாக கூறப்பட்டது.
பிஒய்டி சீனாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது போர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
எந்த நிறுவனம்: இந்த நிலையில்தான் இதில் JSW-MG குழு இந்த தொழிற்சாலையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன. இந்தியாவில் அவர்கள் விற்பனையை விரிவுபடுத்த உள்ள நிலையில், போர்ட் தொழிற்சாலையை வாங்க ஆலோசனை செய்து வந்ததாம் . அப்படி அந்த நிறுவனம் வரும் பட்சத்தில் அது தமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் மிகப்பெரிய குட் நியூஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது;.
இப்படிப்பட்ட நிலையில்தான் போர்ட் நிறுவனம் அந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளதாம். தொழிற்சாலையை விற்க வேண்டாம் என்ற திட்டத்திற்கு போர்ட் நிறுவனம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீண்டும் இந்திய உற்பத்தி மார்கெட்டிற்கு போர்ட் நிறுவனம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி போர்ட் தந்து புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக அந்த நிறுவனம் மீண்டும் சென்னைக்கு ரிட்டர்ன் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ஒலா-வுக்கு வேட்டு வைக்க வரும் வின்பாஸ்ட்? 200 ஏக்கர் தூத்துக்குடி பேக்டரியில் ரெடியாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications