சென்னையில் சாலையோரம் நீண்ட நாள் கார் நிற்குதா? உடனே இத பண்ணுங்க! மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்ஷன்
சென்னை: சென்னையில் சாலையோரங்களில் கார்கள் மட்டும் இன்றி பைக்குகள், சரக்கு வாகனங்கள் கூட சில இடங்களில் அப்படியே நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் இப்படி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டால் தகவல் அளிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் என்பது அதிக அளவில் உள்ளது. அதிலும் பீக் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிக அதிகமாக உள்ளது. இதனால், வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை பல இடங்களில் உள்ளது. அதிலும் சென்னையில் பல்வேறு பஸ் வழித்தடங்களிலும் சாலையோரம் கேட்பாரற்று வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இத்தகைய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கார்கள் மட்டும் இன்றி பைக்குகள், சரக்கு வாகனங்கள் கூட சில இடங்களில் அப்படியே நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில்தான், சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டால் தகவல் அளிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறுகையில், "சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால், மாநகராட்சியின் எக்ஸ் தளம் மூலமாகவும்.. 1913 என்ற எண் மூலமாகவும் பொதுமக்கள் புகாரளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், "பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்கும் விதமாகவும் குறிப்பிட்ட சில இடங்களில் குப்பை பணிகளை நள்ளிரவுக்கு மாற்ற முடிவு மாநகராட்சி முடிவு செய்தது. அதாவது, 400 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் தூய்மை பணி நடைபெற உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குப்பைகளை சேகரிக்க முடியும் என்பதோடு, தூய்மை பணியாளர்களும் சிரமம் இன்றி வேகமாக பணியை செய்ய முடியும் என்பதால் மாநகராட்சி இந்த முடிவை எடுத்தது. முன்னதாக கடந்த ஆண்டு, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா மாமன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, சாலையோரங்களில் கேட்பாரற்று கிடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இத்தகைய வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்படாமல் இடையூறாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, தற்போது மாநகாட்சி இந்த பிளானை கையில் எடுத்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications