தொழிலதிபர் மகளுடன் கல்யாணம்.. கடைசிநேரத்தில் காதலி ட்விஸ்ட்.. சென்னை போரூர் ஏரியில் குதித்த காதலன்
சென்னை மதுரவாயலில் இளம் பெண்ணை திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் போரூர் ஏரியில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னை மதுரவாயலில் திருமண ஆசைக்காட்டி ₨.68 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தததாக காதலி புகார் கொடுத்த நிலையில், மனஉளைச்சலுக்கு உள்ளான காதலன் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் இளைஞர் குதித்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசில் அளிக்கப்பட்ட புகாரால் கடந்த 3ஆம் தேதி தொழிலதிபர் மகளுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மோசடி செய்ததாக இளைஞர் நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறை தேடிவந்தனர்.
இந்நிலையில் நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, மனஉளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் இளைஞர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.

10 வகுப்பு காதல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27வயதாகும் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது: நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எனக்கு நிஷாந்த் என்ற ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை காதலிப்பதாக கூறினார். இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்க தொடங்கிவிட்டோம். அதன் பின்னர் கல்லூரியில் படிக்க தொடங்கிய பின்னரும் எங்கள் காதல் தொடர்ந்தது.

பணம் மோசடி
என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு வாங்கினார். இப்படியாக என்னிடம் ரூ.68 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். நான் பலமுறை கேட்டும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.

நடவடிக்கை எடுங்கள்
என்ன காரணம் என்று நான் விசாரித்த போது, என்னிடம் பணத்தை ஏமாற்றிய நிஷாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபரின் மகளை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் கிடைத்தது. எனவே என்னை காதலித்து தவறாக நடந்து கொண்டுவிட்டு, ரூ.68 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய காதலன் நிஷாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

போலீசில் புகார்
இந்த புகாரின் பேரில் மதுரவாயல் அனைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 3ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது காதலி புகார் அளித்தார்.

தீவிரம் ஏன்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிறுவயதில் இருந்து காதலிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி உள்ளார்.வேறுவொரு பெண்ணை திருமணம்செய்து கொள்ளப்போவதாக கூறியிருக்கிறார். பல லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். எந்த பெண்ணிற்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக இந்த வழக்கில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்" என அவர் கூறினார்.

குதித்த காதலன்
இந்த புகாரை அடுத்து நிஷாந்த்தின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார், போக்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த நிஷாந்த், நேற்று இரவு தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் இல் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் தான் போரூர் ஏரியில் குதிக்க போவதாக கூறியிருக்கிறார். அதன்படி நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள்
இதையடுத்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பாலசந்திரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நிஷாந்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மதுரவாயலில் இளம் பெண்ணை திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் போரூர் ஏரியில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications