பூ ஒன்று புயலானது.. மண்டபத்தில் நுழைந்த இளம் பெண்.. மிரண்ட போன மாப்பிள்ளை.. சென்னையில்!
சென்னை: சென்னையில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை மண்டபத்திற்கு புகுந்து கடைசி நேரத்தில் காதலி .தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அந்த பெண் திருமண மேடையில் பலருக்கும் காட்டி காதலனின் முகத்திரையை கிழித்து திருமணத்தை தடுத் நிறுத்தினார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய காதலன் மறுத்துவிட்டதால் சிறையில் கம்பி எண்ணுகிறார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் (30). இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் பழகி உள்ளார்.

செல்போன் பேச்சு
இது, நாளடைவில் காதலாக மாறியது. அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வில்லிவாக்கத்தில் அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

கேள்விப்பட்ட பெண்
திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கல்யாணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த காதலி உடனே, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

காட்டிய புகைப்படங்கள்
அதன்பேரில், போலீசார், இளம்பெண்ணுடன் நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்றார்கள் அங்கிருந்த கணேசனின் உறவினர்களிடம், அவரது காதல் விவகாரத்தை இளம்பெண் தெரிவித்தார். மேலும் கணேசனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அந்த இளம்பெண் காட்டியிருக்கிறார்.

சிறையில் மாப்பிள்ளை
இதையடுத்து போலீசார் திருமணத்தை நிறுத்தினர். இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணேசன், காதலியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். காதலி அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், அரகோணம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். திருமணத்திற்கு மறுத்த காதலன் கணேசன் கம்பி எண்ணுகிறார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications