சென்னை அண்ணா நகரில் தோழி வீட்டில் தங்கிய லதா.. அலமாரியில் மின்னிய தங்கம்.. சலனத்தால் இப்ப புழல் சிறை
சென்னை: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சுமதி என்பவர் அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது தோழியான அம்பத்தூரைச் சேர்ந்த லதாவும் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். லதா தங்கி இருந்த அறையில் தண்ணீர் வரவில்லை.. இதையடுத்து தனது தோழி சுமதி வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். வீட்டில் இருந்து போகும் போது, தோழியின் 7 சவரன் தங்க நகையை திருடியிருக்கிறார்.. அவரை புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடைய மனைவி சுமதி (வயது 55). இவர், அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடன் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த லதா (47) என்பவர் வேலை செய்து வந்தார். லதா தங்கி இருந்த அறையில் தண்ணீர் வராததால் தனது தோழியான சுமதி வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

அலமாரியில் தங்கம்
அப்போது சுமதி வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 7 பவுன் நகையை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சென்னை திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தோழி வீட்டில் தங்கி இருந்த லதா, தங்க நகையை திருடி அடகு வைத்து பணம் பெற்றதும், சுமதிக்கு சந்தேகம் வராமல் இருக்க கவரிங் நகைகளை வைத்ததும் தெரிந்தது. இதையடுத்து திருமங்கலம் போலீசார் லதாவை கைது செய்தனர்.
வேலைக்கார பெண் கைது
முன்னதாக கடந்த இரண்டு நாள் முன்பு சென்னை நொளம்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண், வேலைக்கு சேர்ந்த 10 நாளிலேயே 14 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்ததால் கைதாகி உள்ளார்.
சென்னை நொளம்பூர் அண்ணாமலை அவென்யூ பகுதியில் 65 வயதாகும் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர் ஆவார். ரங்கராஜின் வீட்டில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 23 வயதாகும் ரிங்கு முகர்ஜி என்ற இளம்பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
எப்படி தெரிய வந்தது
ஓய்வு பெற்ற ஊழியரான ரங்கராஜ் கடந்த 23-ந் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரி பார்த்தபோது, அதில் 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரங்கராஜ் அளித்த புகாரின்பேரில் நொளம்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ரிங்கு முகர்ஜிதான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 14 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications