Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிஞ்சது பஸ் ஸ்டிரைக்.. கொஞ்ச நேரத்தில் திணறிபோன சென்னை.. போக்குவரத்து ஊழியர்களால் பரிதவித்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது... தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து, அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.. என்ன நடந்தது

என்ன காரணம்? போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஓட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது . சென்னை, கும்பகோணம், திருச்சி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஓட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது.

 Chennai government buses stop suddenly chennai public suffering, what happened actually

ஏஜென்ஸிகள்:

சென்னையில் மட்டும் அண்ணா நகர், பல்லவன் சாலை, கோயம்பேடு பணிமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பணிமனையிலும் 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்படவிருந்த நிலையில், அரசு அங்கீகரிக்கப்பட ஏஜென்சிகள் ஒப்பந்தத்தை கோரலாம் என போக்குவரத்து துறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பஸ்களை, திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தனியார் மூலம் டிரைவர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென தங்கள் பஸ்களை, பணிமனைக்கு திருப்பி எடுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.. பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் ஆவடி என சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் பஸ்கள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டன.. போராட்டம் அறிவித்த 10 நிமிஷத்துக்குள்ளாகவே, கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட பஸ்கள், பணிமனைக்கு உள்ளே வந்துநின்றுவிட்டனவாம்..

அத்துடன், தனியார் ஏஜென்சி மூலமாக தமிழ்நாடு போக்குவரத்து துறையில் ஆள் சேர்க்கும் முயற்சியை முற்றிலும் கைடவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை எழுப்ப துவங்கி விட்டனர்..

பஸ்கள் வரவில்லை:

சைதாப்பேட்டை, கே.கே.நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பஸ் பயணிகள் அனைவருமே அவதிக்கு ஆளானார்கள்.. அதாவது, தாம்பரம் பணிமனையிலிருந்து மாநகரப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் பூந்தமல்லி, ஆவடி அரசு பேருந்து பணிமனைகளில் இருந்து பஸ்கள் வெளியே வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது.. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து ஊழியர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக, பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவருமே கடும் சிரமத்தை சந்தித்தனர்.. நடுவழியில் இறக்கிவிட்டு போவது நியாயமா? என்றும் கொந்தளித்தனர். போராட்டம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பொதுமக்கள் பாதிவழியில் இறக்கிவிடப்பட்டனர்.. அதிலும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில், அதிக பயணிகள் குவிந்து விட்டனர்.. நீண்ட நேரமாகவே பஸ்கள் வரவில்லை என்று, ஆதங்கத்துடன் சொன்னார்கள்.

அவதிகள்:

பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் மவுனம் சாதிப்பதால் மக்கள் செய்வதறியாமல் சாலைகளில் காத்துகிடக்கும் நிலையும் ஏற்பட்டது.. இதனால் பஸ் ஸ்டாண்டுகள் முன்பும் போக்குவரத்து பணிமனைகள் முன்பு பொதுமக்கள் குவிய துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

இதையடுத்து, தமிழக முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் உரிய பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சிக்கல்கள் களையப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் போராட்ட அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

 Chennai government buses stop suddenly chennai public suffering, what happened actually

அமைச்சர் பேச்சுவார்த்தை:

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது... தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

அதேபோல, போக்குவரத்து அதிகாரிகள் பணிமனை அதிகாரிகளிடம் போனில் தொடர்பு பேசினார்கள்.. போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், பொதுமக்கள் ஆங்காங்கே தவிக்கிறார்கள் என்றும் வலியுறுத்தி சொல்லி உள்ளனர்.. இந்த தகவலை, பணிமனையில் உள்ள அதிகாரிகள், ஓட்டுநனர்களிடம் சொல்லவும், அதற்கு பிறகே போராட்டம் நிறைவுக்கு வந்தது.. மாநகரில் உள்ள 33 பணிமனைகளிலும் திடீரென நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் ஒவ்வொன்றாக உடனடியாக இயக்க துவங்கினர். அதன்படியே பஸ்கள் இயங்கி வருகின்றன..

 Chennai government buses stop suddenly chennai public suffering, what happened actually

அசம்பாவிதம்:

20க்கும் மேற்பட்ட போலீசார் பணிமனைகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டுவிட்டதுடன், போராட்டமும் முடிவுக்கு வந்தது.. பல்லவன் இயக்க பணிமனைகளில் இருந்து பஸ்கள் ஒவ்வொன்றாக வெளியேறியதையடுத்து, பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.. இதனிடையே, பயணிகள் வசதிக்காக குறிப்பிட்ட சில வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+