அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
சென்னை: சென்னை அரசு ஊழியர்களே நாளை முதல் அடுத்த 3 நாட்கள் உங்களுக்கு விடுமுறை இல்லை.. இதுபற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நாளை புனித வெள்ளி, அடுத்த நாள் சனிக்கிழமை,அதற்கு அடுத்த நாள் ஞாயிறு (ஈஸ்டர்) என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை வந்திருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்..

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள மாநகராட்சி வருவாய்துறை அலுவலக பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காகவும், பெருநகர் சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையானது மார்ச் 29-ந் தேதி, மார்ச் 30-ந் தேதி, மார்ச் 31-ந் தேதி ஆகிய பொதுவிடுமுறை நாட்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்"இவ்வாறு கூறியுள்ளார்.
எனவே சென்னையில் சொத்து வரி கட்டாதவர்கள், தொழில் வரி கட்டாதவர்கள், தொழில் உரிமம் புதுப்பிப்போர் ஆகியோர் புனித வெள்ளி நாளான நாளை, அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று சென்று வரிகளை செலுத்த வாய்ப்பு உருவாகி உள்ளது.. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளின் வருவாய்துறையிலும் வரிகளை இந்த நாட்களில் கட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் வங்கிகளை பொறுத்தவரை இன்று தான் இந்த மாதத்தின் கடைசி முழு வேலை நாள்.. இதன்பிறகு நாளை புனித வெள்ளி விடுமுறையாகும். அடுத்த நாளான மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கிகள் திறக்கப்பட்டாலும் வழக்கமான சேவை இருக்காது.. அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
முன்னதாக நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான வரும் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என்றும், பொதுமக்கள் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவிய தகவல் உண்மையில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். இந்நிலையில், இந்த நிதியாண்டு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதியாகவும், வருமானவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கு வசதியாகவும் அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் வரும் 31-ம் தேதியன்று செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
அன்றைய தினம் அரசு கணக்கு வைத்துள்ள வங்கிகள் தவிர மற்ற கிளைகள் செயல்படாது. மேலும், அன்றைய தினம் பொதுமக்களின் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளும் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications