கிறுகிறு கிண்டி.. போலீசுக்கு ஓடிய ராஜ்பவன்.. "வளையத்துள் திமுக அரசு"?.. அதிர்ச்சி தகவல் வெளியாகிறதா?
சென்னை: ரவுடி கருக்கா வினோத் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், திமுக அரசுக்கு பெருத்த தலைவலியை உண்டுபண்ணியிருக்கிறது. இது தொடர்பான சில பிரத்யேக தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளன.
ஆளுநர் மாளிகை அருகே, பெட்ரோல் குண்டு வீசிய பரபரப்பை தந்தவர் கருக்கா வினோத்.. தமிழக ஆளுநரை கண்டிக்கும் வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வினோத் தற்போது கைதாகி புழலில் இருக்கிறார்.

குண்டர் சட்டம்: இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.. அதனால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.. பிறகு, குண்டர் சட்டத்திலும் கைதானார். கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபோக, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுதல், வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட 3 செக்ஷன்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆவணங்கள்: இருந்தாலும், கருக்கா வினோத் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தமிழக காவல் துறையிடம் இருந்து என்ஐஏ எப்போது பெறும்? கருக்கா வினோத்திடம் விசாரணை எப்போது தொடங்கும்? என்பதெல்லாம் இதுவரை அதிகாரபூர்வமாக தெரியாமலேயே உள்ளது.
அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை: அதுமட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு குறித்த சந்தேகத்தையும் இந்த சம்பவம் எழுப்பியிருப்பதால், இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் ஆர்.என். ரவியும், மத்திய உளவுத்துறையினரும் ரிப்போர்ட் அனுப்பியிருந்தனர். அதனடிப்படையிலேயே, என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக, சிபின்ராஜ் என்ற அதிகாரியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவர், முதலில் கவர்னர் மாளிகையில் இருந்து தனது விசாரணையை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்த சம்பவத்தில் திமுக மீது நேரடியாகவே குற்றச்சாட்டு வைத்து ராஜ்பவன் காவல்துறைக்கு புகார் அளித்திருப்பதால், அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்குவார் என்கிறார்கள்.
திமுக அரசு: அதுமட்டுமல்ல, ரவுடி வினோத்தை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. திட்டமிட்டிரு ப்பதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் ஒரு தகவல் உலாவி வருகிறது. அப்படி வினோத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போது, பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகலாம் என்றும் சொல்கிறது ஐ.பி.எஸ். வட்டாராம். அந்தவகையில், வினோத் விவகாரத்தை வைத்தே, திமுகவுக்கு எதிராக, காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றனவாம்..!!












Click it and Unblock the Notifications