Chennai Guindy Metro: சென்னைக்கு நடுவே.. கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் அதிரடி மாற்றம்! CMRL புது திட்டம்
சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பகுதியில் பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தை கட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பல்முனை வசதிகள் ஒரே இடத்தில் கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது
கிண்டி புறநகர் ரயில் நிலையத்தை ஒட்டியே மெட்ரோவும் அமைக்கப்பட்டிருப்பதால் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் இந்த பாதையில் பயணிக்கின்றனர். இதனை பல்முனை வசதி வளாகமாக மாற்ற மெட்ரோ திட்டமிட்டிருக்கிறது. இதற்காக கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள 3.48 ஏக்கர் நிலப்பரப்பை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இதற்காக அடையாளம் கண்டுள்ளது.

பிராட்வேயில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான பல்முனை வசதி வளாகத்தைப் போலவே, பேருந்து நிறுத்தங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் வணிக இடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் வலையமைப்பில் கிண்டி மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். இங்கு தினசரி 15,000 முதல் 17,000 பயணிகள் வந்து செல்கின்றனர். அருகிலேயே புறநகர் ரயில் நிலையம் இருப்பதால், பல பயணிகள் இந்த இடத்தில் இரு போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கிண்டியில் அமையவிருக்கும் இந்த பல மாடி கட்டிடம் பிராட்வேயில் உள்ளதைப் போல பெரியதாக இருக்காது. இருப்பினும், நகரத்திற்குள்ளும், வெளியூர்களுக்கும் செல்லும் பேருந்துகளுக்கான ஒரு மாற்று மையம், பேருந்து நிறுத்தங்கள், மற்றும் மேல் தளங்களில் சில்லறை மற்றும் வணிக இடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான போதுமான வாகன நிறுத்துமிட வசதிகளையும் வழங்குவோம்.
கிண்டியில் உள்ள இந்த நிலப்பரப்பு விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதாலும், விமானப் பாதைக்கு அருகாமையில் இருப்பதாலும், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) இருந்து உரிய அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு எத்தனை தளங்கள் கட்டலாம் என்பதை முடிவு செய்வோம். தற்போது, ஆறு முதல் ஏழு தளங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த பல மாடி கட்டிடம் கட்டுவதற்கும், மெட்ரோ நிலையத்துடன் இணைப்பதற்கும் ஒரு திட்டத்தை வகுக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு ஆலோசகரைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. "மெட்ரோ நிலையம், புறநகர் நிலையம் மற்றும் கட்ட திட்டமிடப்பட்டிருக்கும் கட்டிடத்தை லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுடன் இணைக்கும் ஒரு பாதசாரி மேம்பாலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்" எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போக்குவரத்து ஆய்வுகள், அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சந்திப்பில் எதிர்பார்க்கப்படும் மக்கள் நடமாட்டத்தின் மதிப்பீடு, திட்டத்தின் இறுதி செலவு மதிப்பீடு, கட்டுமான காலம் மற்றும் பிற அம்சங்கள் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு ஒரு விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்குள், ஆலோசனைப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை CMRL இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications