சந்தோஷம்.. ஆனாலும் வருத்தம்.. சென்னையில் ஆமை வேகத்தில் கொரோனா.. மற்ற மாவட்டங்களில் செம ஸ்பீடு!
சென்னை: சென்னையில் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,231 ஆகும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆகும்.
இன்று 4,231 பேர் பாதிக்கப்பட்டாலும் ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது மக்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுக்கிறது.

கொரோனா
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2,3 தினங்களாக கொரோனா பாதிப்பு 4000-த்தை விட குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் 4000-த்தை தாண்டியது. அதுபோல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள தலைநகர் சென்னையில் குறைந்தது 1900 கேஸ்களாவது நாளொன்றுக்கு பாதிக்கப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக சென்னையிலும் கொரோனா பாதிப்பு கேஸ்கள் 2000-த்தை விட குறைந்திருந்தது.

பரிசோதனை
இதற்கு காரணம் டெஸ்டிங் என சொல்லப்படுகிறது. நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் இன்றைய தினம் 42, 369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் இன்றைய பாதிப்பும் அதிகரித்தே காணப்படுகிறது. இது போல் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேருக்கு என சோதனை செய்ய வேண்டும்.

கொரோனா
அப்போது நோய் மேலும் கட்டுக்குள் வரும். சென்னையில் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளை சென்னையிலிருந்து 2700 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார்கள். இதற்கடுத்து செங்கல்பட்டில் 169 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 262 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும் திருவள்ளூரில் 364 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா
அது போல் தூத்துக்குடியில் 196 பேருக்கும் நெல்லையில் 110 பேருக்கும் தேனியில் 90 பேருக்கும் விருதுநகரில் 289 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 67 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, செங்கல்பட்டு, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications